முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Group - II தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

TNPSC Group - II தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், முதல்நிலைத் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கவலையடையத் தொடங்கியுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி லட்சக் கணக்கைக்கான தேர்வர்களிடம் காணப்படுகிறது.

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை  தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

முன்னதாக, வெளியிடப்பட்ட   ஆட்சேர்ப்பு நடைமுறை குறித்த உத்தேச கால அட்டவணையில்,  ஜூன் மாதத்தில் முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான  மாணவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், முடிவுக்கு அறிவிக்கப்படவில்லை.  இதற்கிடையே,  7138 குரூப் 4 லிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. குரூப் 4 தேர்வுக்குப் பிறகு குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற செய்தி பரவத் தொடங்கியது.

முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், முதல்நிலைத் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கவலையடையத் தொடங்கியுள்ளனர். கடினமான முதன்மைத் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

கட் ஆப் மதிப்பெண்கள்: 

குரூப் 2 தேர்வுக்கு 11,78,000 பேர்  விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.  அநேகமாக, இன்னும் சில நாட்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: TNPSC