டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது
குரூப் 2/ 2 ஏ தேர்வுகள் வரும் சனிக்கிழமை (மே 21ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, 11,78,175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.9,10,321பேர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: TNPSC group 2: குரூப் 2 தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அப்டேட்
நேர்முக தேர்வு பணியிடங்கள்116, நேர்முக தேர்வு அல்லாத 5413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை கூடவோ அல்லது குறையவோ கூடும் என தெரிவித்த அவர், ஜூன் மாதத்தின் இறுதியில் குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாலசந்திரன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.