ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா… முதன்மைத் தேர்வு இப்படி தான் இருக்கும்

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா… முதன்மைத் தேர்வு இப்படி தான் இருக்கும்

TNPSC

TNPSC

முதனிலை தேர்வு முடிவுகள் வரும் தேதியில் இருந்து குறைந்தது 3 மாதத்திற்குள் அதன் முதன்மைத் தேர்வு வந்து விடும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதனிலை தேர்வு முடிவுகள் வரும் தேதியில் இருந்து குறைந்தது 3 மாதத்திற்குள் அதன் முதன்மைத் தேர்வு வந்து விடும். இன்று வரை ஏதும் தயார் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்போதிருந்து ஆரம்பியுங்கள்.

முதன்மை தேர்வின் பேட்டன் என சொல்லப்படும் வரைமுறைகளை முதலில் தெரிந்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

முதன்மைத் தேர்வு 2 தாள்களாக நடக்கும்.

தாள் 1: கட்டாயத் தமிழ்

  • மொழிபெயர்த்தல் :
  • (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்

(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

  • சுருக்கி வரைதல்
  • பொருள் உணர்திறன்
  • சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
  • கட்டுரை வரைதல் : திருக்குறள் தொடர்பாக
  • கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)
  • தமிழ் மொழி அறிவு ஆகியவை அடங்கும் அடங்கும்

SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!

இந்த தாள் 100 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த தாளில் குறைந்தது 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் தாள் 2 ஐ மதிப்பீடு செய்வார்கள். இல்லையேல் மதீப்பீட்டிற்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

தாள் 2 பொது அறிவு: இளநிலை கல்வி தரத்தில் இருக்கும்

இந்த தாளில்,

  • தற்கால நிகழ்வுகள்
  • சமுதாயப் பிரச்சனைகள்
  • சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  • இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  • அறிவியலும் தொழில் நுட்பமும்
  • கலையும் பண்பாடும்
  • பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
  • இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.

SSC CGL 2022 க்கு இன்னும் விண்ணப்பிக்கலையா.. கவலை வேண்டாம்! - மேலும் அவகாசம் நீட்டிப்பு

  • தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு ஆகியவை அடங்கும்.

இந்த தாள் 300 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் நடைபெறும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு இந்த தாளில் குறைந்தது 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு உள்ள பதவிகளுக்கு 40 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். அதோடு சேர்த்து குறைந்தது 103 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Competitive Exams, TNPSC