தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்மை தேர்வு என்பது முதனிலை தேர்வு போல் கொள்குறி வினாக்களாக இருக்காது. குரூப் 2 முதன்மைத் தேர்வு விளக்கத் தாள்களைக் கொண்டது.
முதல் தாள் அடிப்படை- கட்டாயத் தமிழ் கொண்டது. 100 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
பகுதி 1: மொழிபெயர்த்தல் :
(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் என 2 கேள்விகள் கேட்கப்படும்.
பகுதி 2:
SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!
சுருக்கி வரைதல், விளக்கி எழுதுதல், கட்டுரை வரைதல், கடிதம் வரைதல் எல்லாம் பள்ளியில் படித்த பின்னர் பெரிதாக பயன்படுத்தி இருக்க மாட்டோம். ஆனால் அவை பள்ளி வகுப்பின் தரத்தில் தான் கேட்கப்படும். எனவே பள்ளி புத்தகத்தில் இருக்கும் பயிற்சிகளை வைத்து எழுதி பாருங்கள். பழைய வினாத்தாள்களில் இருந்தும் இந்த வருடம் நடந்த மற்ற தமிழ் வினாத்தாள்களைக் கொண்டும் பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி:
தமிழை பொறுத்தவரை எழுத நேரம் பற்றாமல் போக வாய்ப்புண்டு. கேள்விகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் எல்லாம் கட்டுரை வடிவத்தில் 1 பக்கத்திற்கு குறையாமல் எழுதுவதாக இருப்பதால் காலம் அதிகம் பிடிக்கும். எனவே ஆரம்பத்தில் இருந்தே வேகமாக எழுத கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் தேர்விலும் அந்த பழக்கம் வரும். தாளை முழுமையாக எழுதி முடிக்க முடியும்.
திருக்குறள் :
திருக்குறளை பொறுத்த அளவில் தற்போது உள்ள பள்ளி புத்தகங்களில் உள்ள திருகுறள்களை நன்றாக படியுங்கள்.
திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுத பயிற்சி செய்யுங்கள்.
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா… முதன்மைத் தேர்வு இப்படி தான் இருக்கும்
அதிகாரபூர்வ படத்திட்டத்திலேயே இருப்பதால் இதைத்தாண்டி கேள்விகள் வருவது அரிது. இது சார்ந்து, இந்த தலைப்புகளை ஒட்டி தான் கேள்விகள் கேட்கப்படும்.
அதோடு சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுதல், வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுதல், எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதல் கேட்கப்படும். இதற்கும் பள்ளி புத்தகத்தில் இருப்பதை பயிற்சி செய்தால் போதுமானது.
100 மதிப்பெண்களுக்கு குறைந்தது 40 மதிப்பெண் எடுத்தால் தான் தாள் இரண்டையே திருந்துவார்கள். அதனால் தமிழ் தானே என்று அசால்ட்டாக இருக்க வேண்டாம். கவனமாக பார்த்து கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். நேர மேலாண்மையும் மிகவும் அவசியமானது. தினமும் எழுதி பயிற்சி எடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group 2, Group 2 exam, TNPSC