ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு - பொது அறிவுத் தாளை அணுகுவது எப்படி?

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு - பொது அறிவுத் தாளை அணுகுவது எப்படி?

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

தாள் 2 ஐப் பொறுத்தவரை இதில் 3 விதமான கேள்விகள் அமைந்திருக்கும். 6 மதிப்பெண் , 12 மதிப்பெண், 15 மதிப்பெண் கேள்விகள் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வரவிருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்புகள் தொடங்கியிருக்கும் .

முதன்மை தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும்.

தாள் 1: கட்டாயத் தமிழ்: 100 மதிப்பெண்கள்

தாள் 2 : பொது அறிவு: 300 மதிப்பெண்கள்

தாள் 1 இல் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தது 40 மதிப்பெண் எடுத்தால் தான் தாள் 2 ஐத் திருந்துவார்கள். அதனால் தமிழ் தானே என்று அசால்ட்டாக இருக்க வேண்டாம். கவனமாக பார்த்து கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள்.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு கட்டாயத் தமிழை அணுகுவது எப்படி?

அமைப்பு:

தாள் 2 ஐப் பொறுத்தவரை இதில் 3 விதமான கேள்விகள் அமைந்திருக்கும். 6 மதிப்பெண் , 12 மதிப்பெண், 15 மதிப்பெண் கேள்விகள் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.

இதில் நேர்காணல் அற்ற பதவிகளுக்கு குறைந்தது 90 மதிப்பெண் எடுக்கவேண்டும். நேர்காணல் உள்ள பதவிகளுக்கு நேர்காணல் தேர்வின் 40 மதிப்பெண்ணோடு 103/340 எடுக்க வேண்டும்.

அலகு 1: பிரிவு அ, ஆ:

முதல் இரண்டு பிரிவுகள் 6 மதிப்பெண் வினாக்களாகும்.இரண்டு படுதிகளிலும் சேர்த்து 18 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 15 கேள்விகளுக்கு பத்தி அளிக்க வேண்டும்.15 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் என்றால் 15x6= 90 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 50 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும்.

அலகு  2:

இரண்டாம் அலகு, 12 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகளாகும். இந்த பகுதியில் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்படும். அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். இந்த பகுதிக்கு மொத்தம் 10x12=120 மதிப்பெண்களாகும். ஒவ்வொரு கேள்விக்கும் 150 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். தோராயமாக 1 பக்க கணக்கு வரும்.

அலகு 3:

மூன்றாம் அலகு, 15 மதிப்பெண்கள் கொண்ட பெருவினாக்கள். 8 கேள்விகள் கேட்கப்படும் அதில் 6 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இந்த பகுதிக்கு மொத்தம் 6x15=90 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 250 வார்த்தைக்கு மிகாமல் பதில் எழுத வேண்டும். தோராயமாக 2 பக்கம் வரும்.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா… முதன்மைத் தேர்வு இப்படி தான் இருக்கும்

தமிழை விட இந்த பொது அறிவு தாளுக்கு நிறைய படிக்க வேண்டும்.

 • நடப்பு நிகழ்வுகளோடு,
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்- அது சார்ந்த நடப்பு நிகழ்வுகள் ,
 • தேசிய மற்றும் மாநில பொருளாதாரம்,
 • இந்திய மற்றும் உலக வரலாறு,
 • புவியியல்,
 • சமூகவியல்,
 • அரசியல் அமைப்பு
 • தமிழகத்தின் சமூக பொருளாதார நிலை,
 • தமிழர் வரலாறு,
 • சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு என்று அனைத்து பாடங்களையும் படித்திருக்க வேண்டும்.

எழுத்து பயிற்சி:

சுமார் 33 கேள்விகளுக்கு 3 மணி நேரத்தில் பதில் எழுத வேண்டும். எனவே யோசித்து எழுதலாம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது ஒரு மணி நேரத்திற்குள் 6 மதிப்பெண் வினாக்களை முடித்தாக வேண்டும். ஒரு மணி நேரத்தில் 12 மதிப்பெண் வினாக்களை எழுத வேண்டும். மீதம் இருக்கும் ஒரு மணி நேரத்தில் 15 மதிப்பெண்களை முடிக்க வேண்டும்.

டிப்ஸ்:

ஒரு சிலர் பெருவினாக்களை முதலில் எடுத்து எழுத ஆரம்பிப்பர். கடைசியில் 6 மதிப்பெண் வினாக்களை எடுப்பர். அதில் சில சிக்கல்கள் உண்டு பெரு வினாக்களை முதலில் ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே போகும், நேரம் விரயமாகும். முடிந்தவரை வரிசையாகவே செல்லுங்கள்.

தினமும் ஏதேனும் ஒரு நடப்பு நிகழ்வை வைத்து 6 மதிப்பெண், 12 மதிப்பெண், 15 மதிப்பெண் என 3 வகைகளிலும் எழுதி பாருங்கள். பழைய கேள்விகளை வைத்து கூட எழுதி பயிற்சி செய்யுங்கள். எழுத எழுத தான் வேகமாக எழுதவும் முடியும். ஒரு தலைப்பில் எந்த மதிப்பெண் வினாவிற்கு எப்படி எழுதலாம் என்ற தெளிவும் கிடைக்கும். தினமும் 3 மணிநேரம் அமர்ந்து எழுதும் பழக்கத்தை முயற்சி செய்து பாருங்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Exam preparation, Group 2, Group 2 exam, TNPSC