ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 2 தேர்வர்களே... டிஎன்பிஎஸ்சி அறிவித்த முக்கிய அறிவிப்பு!

குரூப் 2 தேர்வர்களே... டிஎன்பிஎஸ்சி அறிவித்த முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC group 2 Main Examination:முன்னதாக, 8ம் தேதி வெளியான தேர்வு முடிவில், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  5446 காலிப்பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ நிலைகளுக்கான தேர்வு கடந்த மே  மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்.

  இந்நிலையில், கடந்த 8ம் தேதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 58081 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

  குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது.

  இந்த முதன்மைத் தேர்வு  எழுதுவதற்கு தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக, 8ம் தேதி வெளியான தேர்வு முடிவில், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தேர்வுக் கட்டணத்தில் சில திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, முதன்மைத் தேர்வுக்கு தேர்வுக்கு கட்டணமாக ரூ.150 மட்டுமே செலுத்தினால் போதுமானது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எனவே, முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற  தேர்வர்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி... நாளை மறுநாள் நுழைவுத்தேர்வு

  முதன்மைத் தேர்வுகள்: 

  முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், அடுத்தக் கட்டமாக தங்களது மூலச் சான்றிதழ்களை  ஸ்கேன் செய்து, உங்கள் அருகில் உள்ள அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் (டிஏசிடிவி) மாநிலம் முழுவதும் 659 மையங்களை இயக்கி வருகிறது.  இ- சேவை மையங்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். 

  இதையும் வாசிக்கஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி... மாதம் ரூ.8000 உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

  17.11.2022 முதல் 16.12.2022 முடிய வரை இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது. மேலும், முதன்மைத் தீர்வுகாண தேர்வு கட்டணத்தை 15.12.2022-க்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

  Published by:Salanraj R
  First published:

  Tags: Group 2 exam, Tamil Nadu Government Jobs, TNPSC