டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (TNPSC GROUP 2) பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க சில முக்கிய அறிவுரைகளை தேர்வாணையம் வழங்கியுள்ளது.
1 . தேர்வு நேரம் - முற்பகல் 9.30 முதல் 12.30 மணி வரை. நாள்: 21.05.2022
3.தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் 8.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. கருமை நிறம் கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே தேர்விற்கு எடுத்து வர வேண்டும்.
4. தேர்வு கூடத்திற்கு அனுமதிச் சீட்டு இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வுக்கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.
5. ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , ஓட்டுநர் உரிமம் என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்.
6. வினாத்தாளில் ஏதேனும் குறை இருந்தால் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
5. வினாத்தாள் வரிசை எண்ணை (QUestion Booklet Number) விண்ணப்பதாரர் தனது OMR விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரப்ப வேண்டும். வினாத்தாள் வரிசை எண் அடிப்படையில் தான் OMR விடைத்தாள் மதிப்பீடு செய்ய முடியும். எனவே, வினாத் தாள் வரிசை எண்ணை சரியாக குறிப்பிடாமலோ அல்லது விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக நிரப்பாமலோ இருந்தால் 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
6. ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால், அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
7. பென்சில் கொண்டு நிரப்பப்படக் கூடாது.
TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்
8. ஒவ்வொரு வினாவிற்கும் A,B,C,D மற்றும் E என ஐந்து விடைகள் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையை நிரப்ப வேண்டும். பதில் தெரியாத கேள்விகளுக்கு 'E' விடையை நிரப்ப வேண்டும்.
9. OMR விடைத்தாளில் அனைத்து கேள்விகளுக்கும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு கேள்விகள் கூட நிரப்பப்படாமல் இருந்தால், மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்- முழு விபரம் இதோ
10. தேர்வு கூட அனுமதிச் சீட்டில் இடம்பெற்றுள்ள புகைப்படம் சரியாக அடையாளம் காண இயலாத நிலையில் இருந்தால், தேர்வு கண்காணிப்பாளர் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டு கையொப்பமிடவேண்டும்.
தேர்வு எழுதுவோர் தேர்வாணையம் விதித்த இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC