Home /News /employment /

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நேரத்தில் மாற்றம், வயது வரம்பு தளர்வு, முக்கிய அறிவிப்புகள் வெளியீடு....

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நேரத்தில் மாற்றம், வயது வரம்பு தளர்வு, முக்கிய அறிவிப்புகள் வெளியீடு....

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

    TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நேரத்தில் மாற்றம், வயது வரம்பு தளர்வு உள்பட முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2, குரூப் 2A தேர்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    பிப்ரவரி 23 - மார்ச் 23 ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும்.

    நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

    இதையும் படிங்க - TNPSC | டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் வேலையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடத்த திட்டம். நேர்முக தேர்வு அல்லாத பதவிக்கான கலந்தாய்வு டிசம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 17 சப் ரிஜிஸ்டர் பதவிகளும், தொழிலாளர் நலத்துறையில் 19 இடங்களும், 58 காலிப்பணியிடங்கள் Assitant Special Branch-ல் ( சிறப்பு கிளை உதவியாளர்) முதல் முறையாக காவல் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது. 115 மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

    இதையும் படிங்க - SBI SCO recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?

    இனி அரசு நிறுவனத்தின் கழகங்கள் மற்றும் வாரியத்திற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் டி.என்.எஸ்.பி.எஸ்.சி நடத்தும். பணி விவரங்களை வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 3ம் தேதி இது குறித்த விவரங்கள் வெளியிடப்படும். தமிழ் வழி வினாத்தாளில் ஏற்படும் பிழைகளை சரி செய்வதற்கு நிபுணர்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது, பிழைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேர்வுக்கு 9 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட இதர வாரிய பணியிடங்களை குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளில் வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் 3ஆம் தேதி அதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி