ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்.... சான்றிதழ் பதிவேற்றம் செய்வது இனி சுலபம்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்.... சான்றிதழ் பதிவேற்றம் செய்வது இனி சுலபம்

தேர்வு

தேர்வு

குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

டிஎன்பிஎஸ்சி குரூப் 2&2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது மூலச் சான்றிதழ்களை  ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக  இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு (TNPSC GROUP II&IIA MAIN EXAMINAION) முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு; தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? - வெளியான அப்டேட்

மேலும் தேவைப்படும் இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைI சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்:  1800 425 2911 - ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு: 

குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது.  16.12.2022 முடிய வரை இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  அதேபோன்று, 15.12.2022-க்குள் விண்ணப்பதாரர்கள் ரூ.150-ஐ தேர்வு கட்டணமாக  செலுத்த வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

First published:

Tags: TNPSC