டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A பிரிவில் உள்ள 5446 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுக்கு 58081 பேர் தகுதியாகியுள்ளனர். அவர்களுக்கு 25.02.2023 ஆம் நாள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து அதனை தெளிவுபடுத்திப் படிக்கும் போது எளிமையாகத் தேர்வில் வெற்றி பெறலாம்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 இன் படி 5446 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கொண்ட மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் இடம்பெற்றுள்ளன. இவை குரூப் 2 மற்றும் குரூப் 2 A என்று குறிப்பிடப்படுகிறது. இப்பணிகளுக்கு முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். அதில் இப்பதவிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு 23.02.2022 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி முதல் நிலை தேர்வில் 9,95,808 பேர் பங்கேற்றனர். அதில் முதன்மைத் தேர்வுக்கு 58,081 பேர் தேர்வாகினர். இவை இந்த வருடத்திற்கான தேர்வின் விவரங்கள். .
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வில் எந்தந்த பணிகள் இடம்பெறும்?
முதன்மை தேர்வு எழுபவர்கள் குரூப் 2 மற்றும் குரூப் 2 A பிரிவுகளில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பணி பிரிவுகளையும் தெரிந்துகொள்ளுதல் நல்லது. இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வின் சேவை பிரிவுகள்
1.தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி
2.தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணி
3.தமிழ்நாடு தொழிலாளர் சார்நிலைப் பணி
4.தமிழ்நாடு பதிவு சார்நிலைப் பணி
5.தமிழ்நாடு அமைச்சுப்பணி
6.தமிழ்நாடு நகராட்சி ஆணையர் சார்நிலைப் பணி
7.தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி
8.தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலைப் பணி
9.தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை சார்நிலைப் பணி
10.தமிழ்நாடு வேளாண்மை விற்பனை சார்நிலைப் பணி
11.தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் சார்நிலைப் பணி
12.தமிழ்நாடு பேருராட்சிகள் சார்நிலைப் பணி
13.தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை சார்நிலைப் பணி
14.தமிழ்நாடு தலைமை செயலகப் பணி
16.தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகப் பணி
இடம்பெறும் துறைகள்:
1.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
2.சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை
3.தொழிலாளர் துறை
4.பதிவுத் துறை
5.ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை
6.காவல் ஆணையர் அலுவலகம்
7.குற்ற புலனாய்வுத் துறை
8.நகராட்சி நிர்வாகத் துறை
9.தலைமைச் செயலகம் (சட்டத்துறை அற்ற)
10. தலைமைச் செயலகம் (சட்டத்துறை)
11.தலைமைச் செயலகம் (நீதித்துறை)
12.அரசுப் பணியாளர் தேர்வாணையம்
13.கூட்டுறவு சங்கத் துறை
14.இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
15.உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை
16.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை
17.கைத்தறி மற்றும் துணிநூல் துறை
18.வருவாய் துறை
19.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
20.வணிவரித்துறை
21.குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
22.தொழில் மற்றும் வணிகத் துறை
23.நில நிர்வாக துறை
24.கருவூலம் மற்றும் கணக்குத் துறை
25.காவல் துறை
26.மருத்துவ மற்றும் ஊரக நலத் துறை
27.போக்குவரத்து துறை
28.பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
29.மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை
30.நெடுஞ்சாலைத் துறை
31.ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை
32. தேசிய மாணவர் படைத் துறை
33.பள்ளி கல்வித் துறை
34.சமூக பாதுகாப்புத் துறை
35.வனத்துறை
36.நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரித் துறை
37.எழுது பொருள் மற்றும் அச்சகத் துறை
38.நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை
39.பட்டு வளர்ச்சித் துறை
40.தொழில்நுட்பக் கல்வித் துறை
41.சர்க்கரைத் துறை
42.பேருராட்சிகள் துறை
43.கூட்டுறவு தணிக்கைத் துறை
44.தமிழ்நாடு மாநில திட்டக் குழு
இந்த விவரங்கள் முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு உதவும். மேலும் இவை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A தேர்வு குறித்த ஒரு தெரிவையும் தரும் என்று கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, TNPSC