ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC குரூப் 2 & 2 ஏ தேர்வு 2023 ஆண்டு நடைபெறுமா? தொடரும் தாமதங்கள்

TNPSC குரூப் 2 & 2 ஏ தேர்வு 2023 ஆண்டு நடைபெறுமா? தொடரும் தாமதங்கள்

குரூப் 2 & 2ஏ தேர்வு

குரூப் 2 & 2ஏ தேர்வு

TNPSC Group 2 & 2 A exams : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் குரூப் - 2 & 2 ஏ தேர்வுக்கான தகவல்கள் இடம்பெறவில்லை.

டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் அதிகப் பணியிடங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 &2 ஏ தேர்வுக்கான விவரங்கள் இடம்பெறவில்லை.

2022 ஆம் ஆண்டு குரூப் -2 & 2 ஏ தேர்வுக்கான விவரங்கள் 2022 - ம் ஆண்டு திட்ட அட்டவணையில் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2022 பிப்ரவரி 23 ஆம் நாள் 5446 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு மே மாதம் 21 ஆம் நாள் நடைபெற்றது.

இத்தேர்வில் 9,95,808 பேர் பங்கேற்றனர். முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் 8 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் 58,081 தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு 2023 ஆம் ஆண்டும் பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2 & 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை.

தொடர்ந்து தாமதமாகும் குரூப் 2 & 2 ஏ தேர்வுகள்:

2022 கால அட்டவணைப் படி தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு மே மாதத்திலும் அதற்கான முடிவு ஜூன் மாதத்திலும் இடம்பெற வேண்டும். தொடர்ந்து முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்று டிசம்பரில் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். 2023 ஆண்டு தொடக்கத்தில் கலந்தாய்வு முடிந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பணி நியமனம் வழங்கப்படும் வேண்டும்.

Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

தேர்வு அட்டவணை உத்தேச கால அட்டவணையாக வெளியிடப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குரூப் 2 & 2 ஏ தேர்வுக்கு இன்னும் முதன்மை தேர்வே நடைபெறவில்லை. 2022 கால அட்டவணைப் படி கலந்தாய்வு நடக்கவிருந்த மாதங்களில் முதன்மை தேர்வு நடைபெறவுள்ளது.

இது போன்று, குரூப் 1 தேர்வுக்கான முதல் நிலை தேர்வு தேதியும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2 & 2 ஏ தேர்வு பற்றி தகவல்கள் இடம்பெறாததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC