Home /News /employment /

TNPSC Group 2, 2A தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

TNPSC Group 2, 2A தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

    TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் , நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

    Also Read: குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. கடந்த 18-ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தொடர்பாக சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடத்தப்படும்.

    குரூப் 2,2ஏ தேர்வுக்கான முழுஅறிவிப்பு



    பிப்ரவரி23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் apply.tnpscexams.in,
    www.tnpsc.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Group 2, Group 2 exam, TNPSC

    அடுத்த செய்தி