குரூப் 2/2A எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இந்த உத்தேச விடைகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
முன்னதாக, குரூப் 2/2A பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது. 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
TNPSC Group 2/2A Exam Tentative Answer keys
பொதுவாக, தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும். அதன்படி, நாளைக்குள் தேர்வாணைய இணையதளத்தில் குரூப் 2 தேர்விற்கான உத்தேச விடைகள் (Answer Keys) வெளியாகும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை, யுபிஎஸ்எஸ்சி வெளியிட்ட உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள்
தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரளிவுபடுத்தியுள்ளது.
தேசிய சாதனை கணக்கெடுப்பு: கல்வி கற்றலில் பின்னடைவைச் சந்தித்த தமிழ்நாடு
பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியானது தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முக்கியமான நாட்கள்:
முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு |
ஜூன் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு |
செப்டமபர் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு |
டிசம்பர் 2022 |
சான்றிதழ் சரிபார்ப்பு |
ஜனவரி 2023 |
நேர்முகத் தேர்வு
கலந்தாய்வு |
பிப்ரவரி 2023 |
தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், தேர்வர்களின் OMR விடைத்தாள் மற்றும் முதன்மைத் தேர்வு விடைத்தாள் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உரிய கட்டணம் செலுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.