Home /News /employment /

TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்

TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒன்றியத்துப் பட்டியலின் 56வது பிரிவின் படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் இணைப்பு மத்திய அரசின் வரம்பிற்குள் இருக்கும்.     

  • Last Updated :
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2/2A,4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்திய ஆட்சியியல், மத்திய மாநில உறவுகள்  போன்ற பிரிவுகளில் உள்ள சமீபத்திய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

    1.  127-வது அரசியல் சாசன திருத்தம்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் கூடுதலாக சேர்க்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்குவதற்கான 127-வது அரசியல் சாசன திருத்தம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    2. தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021: 

    முக்கிய மாற்றங்கள் : வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இது முற்றிலும் தன்னார்வ இணைப்பாகும். ஆதார எண் தராததால், தெரிவிக்காததால் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படாது.

    மக்கள் ஓராண்டில் நான்கு முறை தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜுலை 1, அக்டோபர் 1ல் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    மனைவி என்ற சொல்லுக்குப் பதிலாக வாழ்க்கைத் துணைவி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் உள்ள பெண் வீரர்களின் கணவர்களுக்கு சர்வீஸ் வாக்காளர்கள்  தகுதி வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல்கள் நடத்துவதற்கு, வாக்குகளை எண்ணுவதற்கு, வாக்கு இயந்திரங்களையும் வாக்களிக்கும் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் தங்கி இருப்பதற்கும் எந்தக் கட்டிடத்தையும் பயன்படுத்தலாம்.

    TNPSC Current Affairs 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே

    3. அணை பாதுகாப்புச் சட்டம் 2021:   

    நாட்டில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளிலும் அவை பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் உரிய கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள இந்த சட்டம் வகைசெய்கிறது.

    அணை பாதுகாப்பு என்பது மாநில அரசுகளை சார்ந்ததாகும். 








    மாநிலத்துப் பட்டியலின் 17வது பிரிவின் படி, நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய், வடிகால்கள், தண்ணிரை தேக்கி வைத்தல் ஆகியவற்றை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வைக்கலாம் என அரசியல் சட்டம் பரிந்துரைத்திருக்கிறது.

    ஒன்றியத்துப் பட்டியலின் 56வது பிரிவின் படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் இணைப்பு மத்திய அரசின் வரம்பிற்குள் இருக்கும்.

    அணைகள் மீதான மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் மாற்றவோ அல்லது நீர்த்துப் போகவோ செய்யாது என்பதுடன், மாநிலங்களால் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகள் மற்றும் அணைகளின் மேலாண்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சர்வாதிகாரப் போக்குடன் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

    4. 46வது ஜிஎஸ்டி சபைக் கூட்டம்: 

    46வது ஜிஎஸ்டி சபைக் கூட்டம் புது தில்லியில் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சரும் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

    TNPSC Current Affairs 7: முக்கிய நிகழ்வுகளும், அதன் பின்னணி விபரங்களும்

    இக்கூட்டத்தில் , 45வது ஜிஎஸ்டி சபைக் கூட்டத்தின் ஜவுளி தொடர்பான பரிந்துரை நடைமுறையைத் தள்ளிவைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வீதங்களே 2022 ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பின்னரும் தொடரும்.

    ஜிஎஸ்டி  சபை என்றால் என்ன? 

    ஜிஎஸ்டி சபை என்பது மத்திய நிதி அமைச்சர் (சபை  தலைவர்) மாநில அமைச்சர் (வருவாய்) மற்றும் நிதி மற்றும் வரி விதிப்பு அமைச்சர்கள் ஆகியோரை கொண்ட ஒரு அமைப்பாகும். ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்களில்   மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு  இந்த அமைப்பு பரிந்துரைகளை வழங்குகிறது. ஆண்டுக்கு நான்கு முறை இந்த சபை கூடும் என்று அறியப்படுகிறது.

    5. தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டம்: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டம்  (29th Meeting of the Southern Zonal Council  ) நடைபெற்றது.

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்மண்டலக் குழுவாகும்.

    TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

    மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? 

    இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு 1956இன் படி, இந்திய மாநிலங்களை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது . மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதே மண்டலக் குழுக்களின் பணியாகும். வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு பிரச்சனைகளை களைவதற்கும், பிணக்குகளையும் தீர்ப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கிட 1971ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழு அமைக்கப்பட்டது. அனைத்து மண்டலக் குழு கூட்த்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகிப்பார். 

    6. நீட் தேர்வும் - கூட்டாச்சி முறையும்: 

    2017ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948ன்படி நாடுமுழுவதும் உள்ள 100 சதவீத மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு) இருக்கைகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    ஒன்றியத்துப் பட்டியலில் உள்ள பிரிவு 66-ன் படி, உயர்கல்வி நிறுவனங்களின் தரங்களை நிர்ணயித்தல் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கு உண்டு.  அதேபோன்ற, ஒருங்கிணைப்பு பட்டியலில் உள்ள 25வது பிரிவின் படி, ஒன்றியத்துப் பட்டியலில் உள்ள 63,64,65,66 பிரிவுகளுக்கு உப்பட்டு, சட்டமியற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு. இந்த அதிகாரைத்து வைத்து தான், தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவை கொண்டு வந்தது.

    254வது சரத்தின் படி, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும், மாநில சட்டமன்றங்களினால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் போது, மாநில அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், அச்சட்டம் மேலோங்கி நிற்கும்.  எனவே, தமிழக அரசு நீட் விலக்கு மசோதாவுக்கு இசைவு பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

    TNPSC Current Affairs Part 5: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகளின் பட்டியல் இங்கே

    7. மாநிலங்கள் சார்பாக மத்திய அரசு கடன் வாங்கும் திட்டம்:

    சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் ஏற்பட்டுள்ள குறைவை ஈடுசெய்ய மாநிலங்கள் சார்பாக மத்திய அரசு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் பெறும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.

    India Inflation: 8 ஆண்டுகளில் இல்லாத பணவீக்க விகிதம் - காரணம் என்ன?

    இதற்காக, இரண்டு விருப்பத் திட்டங்களை மத்திய அரசு முன் வைத்தது. முதலாவது திட்டத்தில், மத்திய அரசு ஏற்பாடு செய்து வழங்கும் கடன் திட்டம். இரண்டாவது வெளி சந்தையில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளும் திட்டம். நாட்டின் அனைத்து மாநிலங்களும்,  முதலாவது விருப்பத்தை தேர்வு செய்துள்ளன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி