தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது.
அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு | ஜூன் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு | செப்டம்பர் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு | டிசம்பர் 2022 |
சான்றிதழ் சரிபார்ப்பு | ஜனவரி 2023 |
நேர்முகத் தேர்வுகலந்தாய்வு | பிப்ரவரி 2023 |
கட் ஆப் மதிப்பெண்கள்:
ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு
ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதையும் வாசிக்க: DRDO-ல் 630 காலிப்பணியிடங்கள். கேட் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7138 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. முற்பகல் 9.30 மணி வரையில் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடைபெறும். எனவே , குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த பிறகே குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC