ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

தேர்வு

தேர்வு

2018 நவம்பர் முதல் மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் நாடு முழுவதும் ஒரே சீரான மகளிர் உதவி எண் 181 ஏற்படுத்தப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

TNPSC Current Affairs Preparation: தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.   எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன.   பொது அறிவுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டியது மிகவும்  அவசியம்.

பெண்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய/மாநில அரசுகள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கீழே  கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

அவ்வையார் விருது:  சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  தொண்டாற்றும் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சுதந்திர தின விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டது?

2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது கிரிஜா குமார்பாபுவுக்கு வழங்கப்பட்டது.

பெண்களின் திருமண வயது: பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்காக குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) சட்டம் 2021, 21.12.2021 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மகளிர் உதவி எண்.181 :.

2018 நவம்பர் முதல் மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் நாடு முழுவதும் ஒரே சீரான மகளிர் உதவி எண் 181 ஏற்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் 24 மணி நேர உடனடி மற்றும் அவசர கால அழைப்பை ஏற்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre):  தனியார் மற்றும் பொது இடங்களில்,குடும்பங்களில், சமுதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிட, மத்திய அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த சேவை மையம் என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாலினம் சார்ந்த துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காலிக தங்கும் வசதி, உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகள்  கிடைக்கும் வகையில், 34 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் 32 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 701 ஒருங்கிணைந்த சேவை மையம்:  இயங்கி வருகின்றன. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3 லட்சம் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிர்பயா நிதி: 

2012 டெல்லி கும்பல்-வல்லுறவு சம்பவத்துக்குப் பிறகு,  பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிடும் நோக்கில் 2013ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்  நிர்பயா நிதி அறிவிக்கப்பட்டது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டம்:

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டம்: 

தமிழக அரசின் 2022-23 நிதிநிலை அறிக்கையில்,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர்  இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பழைய திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய  திட்டத்தின் கீழ், அரசுப்  பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.     

இருப்பினும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகன் திருமண நிதியுதவித் திட்டம், அண்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம் போன்ற இதர திருமண நிதியுதவித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம் : 

சமுதாயத்தில் காணப்படும் சாதி வேறுபாடு மற்றும் வரதட்சணைக் கொடுமைகளை களையும் பொருட்டு, கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்த 1968 முதல்  இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.   இத்திட்டத்தில் வருமான வரம்பு இல்லை.     

 டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் :  1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு,  விதவை மறுமணத்தினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வருமான வரம்பு இல்லை.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகன் திருமண நிதியுதவித் திட்டம்: 

ஏழை கைம்பெண் தாய்மார்களின் துயர் தீர்க்கும் வகையில் அவர்களது மகளின் திருமணத்தை நடத்த உதவும் நோக்கில் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000

அண்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம்:  

தாய் மற்றும் தந்தையை இழந்த ஆதரவற்ற பெண்கள், திருமணம் செய்து கொள்ள உதவி செய்திடும் வகையில் 1985-ஆம் ஆண்டு அரசால் துவங்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டுவருகிறது .

Published by:Salanraj R
First published:

Tags: TNPSC, Violence against women