டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்2/2A பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் மே 21ம் தேதி நடைபெற இருக்கிறது. முதல்நிலைத் தேர்வில், பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுப் பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற, பொது ஆங்கிலத்தில் குறைந்தது 85 மதிப்பெண்களாவது தேர்வர்கள் பெற வேண்டும். எழுத்துத் தேர்வில் வெற்றியை நிர்ணயிப்பதில், ஆங்கிலம் (தமிழ் ) பாடப்பிரிவுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.
பொது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குரூப் 4 பாடத்திட்டத்தை பதிவிறக்க செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்
பொது ஆங்கிலத்தில் 25 கவிதைகளும் , 14 உரைநடைப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. உரைநடைப் பகுதிகள் மிகவும் எளிதானவை என்று கூறப்படுகிறது. எனவே, கவிதைப் பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட பாடல்களை இங்கே காண்போம்.
Stopping by Woods on a Snowy Evening (9ம் வகுப்பு ஆங்கிலம்) : இதன், ஆசிரியர் இராபர்ட் புரொஸ்ட் ஆவார். அமெரிக்க நாட்டைப் சேர்ந்த இவர் மிகத்தீவிர நாட்டுப்பற்று சிந்தனை கொண்டவர். இயற்கையைப் பற்றிய இவரது கருத்துக்களும் மிகவும் வித்தியாசமானவை.
பொதுவாக, கவிஞர்கள் வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைந்த பகுதியான இயற்கையை காண்பதுண்டு. இயற்கை அன்னையின் குழந்தைகள் தான் மனிதர்கள் என்ற கூற்றை அவர் ஏற்கவில்லை. மாறாக, இயற்கை மனிதர்களுக்கு வெளியே இருக்கிறது. இயற்கை என்பதை மனிதர்களை ஆட்கொள்ளும் வேற்றுலக சக்தி. அதன் அழகுணர்ச்சி நம்மை முற்றிலுமாக முடக்கி விடும். அதனுடன் தொடர்ந்து உரையாடல் நடத்துவதை தவிர மனிதர்களுக்கு வேறு வழியில்லை என்ற எண்ணம் கொண்டவர். அவரது, பெரும்பாலான படைப்புகளில் இதன் தாக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்த கவிதையில் அதனை மிகத் தீவிர தண்மையுடன் விளக்கியிருப்பர்.
சுருக்கம்: பனித்தூறல்களால் மூடப்பட்ட காட்டின் இருளை விளக்க கவிஞர் முற்படுகிறார். அந்த இயற்கை அழகும், அதனால் ஏற்பட்ட கவனச் சிதறல்களும் அவரை நிலைகுழைய செய்கின்றன. ஆழமான, இருளான, அழகான அந்த மாலைப்பொழுதில் கவிஞர் தன்னை நிரந்தமாக தொலைத்துக் கொள்ள விரும்புகிறார். இருந்தாலும், இன்னும் சில அனுபவங்களை (மேலும், பலமுறை தொலைய வேண்டும்) பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அந்த இடத்தை விட்டு கிளம்ப முடிவு செய்கிறார்.
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
( இந்த மரப்பரப்பு யாருடையது என்பதை நான் அறிவேன் என்று நினைக்கிறேன். இங்குள்ள ஏதோவொரு இல்லத்தில் அவர் முடங்கி கிடந்தாலும்; பணியால் மூடிய இந்த அழகிய மரப்பரப்பைத் திகைத்து பார்க்கும் என்னை அவர் கண்டுகொள்ள வில்லை .
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
(ஆண்டின் மிக இருளான மாலைப் பொழுதில், மரப்பரப்புக்கும், பனி உறைந்த ஏரிக்கும் இடையே இப்படி அசைவின்றி நிற்கிறார்? இது விசித்திரமனதுதானே என்று எனது குதிரை சிந்தித்தியிருக்கும்)
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.
(ஏதேனும் தவறுதலாக நிற்கிறோமா என்பதை உணர்த்த குதிரை ஓசை எழுப்புகிறது. அந்த இடத்தில், அதைத் தவிர காற்றின் ததும்பலும், பனித் துகள்கள் எழுப்பிய ஓசைகளும் மட்டுமே இருந்தன)
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
(இந்த மரப்பரப்புகள் மிகவும் அழகாக, இருளாக, ஆழமாக உள்ளன. உறங்குவதற்கு ( அல்லது, இறப்பதற்கு) முன்னாள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்ற வாக்குறுகுதியை நிறைவேறுகிறேன்)
அருஞ்சொற்பொருள்:
queer - புதிரான, விசித்திரமான, வழக்கத்திற்கு மாறான.
I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe:
I told it not, my wrath did grow.
(நண்பன் மீது கோபம் கொண்டால், அதை பகிர்ந்து கொள்கிறேன். எனது சீற்றம் முடிவடைகிறது. ஆனால், எதிராளியின் மீதான கோபத்தை நான் சொல்ல விரும்புவதில்லை. அதனால், எனது சீற்றம் வளர்கிறது )
And I watered it in fears
Night and morning with my tears,
And I sunned it with smiles
And with soft deceitful wiles.
( இங்கே, எதிராளி மீதான தனது கோபத்தை மரத்தோடு கவிஞர் உருவகப்படுத்திகிறார் (Metaphor). கசப்பு, கோபம், கண்ணீர், சிரிப்பு, புரட்டான சூழ்ச்சி ஆகியவற்றை கொண்டு கோபம் எனும் மரத்தை வளர்த்தேன்.)
And it grew both day and night,
Till it bore an apple bright,
And my foe beheld it shine,
And he knew that it was mine,--
( பிரகாசமான ஆப்பிள் பழம் உருவாகும் வரை தோட்டதில் இரவும், பகலுமாக மரம் (கோபம்) வளர்ந்தது. எதிராளியை ஈர்த்தது)
And into my garden stole
When the night had veiled the pole;
In the morning, glad, I see
My foe outstretched beneath the tree.
(பழத்திற்கு உரியவன் தானென்று தெரிந்தும், இருள்சூழந்த ஓர் இரவில் பழத்தை அபகரிக்க தோட்டத்துக்குள் எதிராளி நுழைந்தான். அடுத்த நாள், காலை மரத்தின் அடியில் எதிராளி விசாலமாக கிடைத்ததை பார்த்து பெரு மகிழ்ச்சி கொண்டேன்)
அருஞ்சொற் பொருள்:
foe -எதிரி
wrath - சீற்றம்
deceitful wiles - நேர்மையற்ற; உண்மையற்ற ஒன்றை உண்மையானதாகப் பிறரை நம்பச் செய்யும் வகையில் முயல்கிற; ஏமாற்றுகிற; புரட்டான
shine - ஒளி
sunned - வெப்பம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC