தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2ஏ தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.
1. கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்:
கடந்தாண்டு, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதன்மூலம்,இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன. டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (Foundation for Environment Education) நீலக்கொடி சான்றிதழை வழங்குகிறது.
சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆகிய எட்டு இந்தியக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன?
2. டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள்:
டோக்கியோ 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்தன. ஒன்பது விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கு 54 வீரர்கள் அனுப்பப்பட்டனர். இது, இதுவரை இல்லாத அளவு அதிகப்படியான எண்ணிக்கையாகும்.
ஆண்டு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
மொத்தம் |
---|
2021 |
5 |
8 |
6 |
19 |
2016 |
2 |
1 |
1 |
4 |
2012 |
0 |
1 |
0 |
1 |
2004 |
1 |
0 |
1 |
2 |
1984 |
0 |
2 |
2 |
4 |
1972 |
1 |
0 |
0 |
1 |
Total |
9 |
12 |
10 |
31 |
2020 போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்:
பெயர் |
போட்டி |
|
சுமித் அந்தில் |
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் |
தங்கம் |
பிரமோத் பகத் |
பேட்மிண்டன் பிரிவு |
தங்கம் |
கிருஷ்ணா நாகர் |
பேட்மிண்டன் பிரிவு |
தங்கம் |
மனிஷ் நார்வால் |
துப்பாக்கிச் சுடுதல் பிரிவு |
தங்கம் |
அவானி லெகேரா |
துப்பாக்கி சுடும் போட்டி |
தங்கம் |
பாரா ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் அவானி லெகேரா.
முதல் முறையாக போட்டியிட்ட அவானி, ஆர்2 பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தார் மற்றும் உலக சாதனையை சமன் செய்தார்.
தமிழகத்தைச் சேர்நத வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
UPSC SERIES 1: பருவநிலை மாற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்
3. பிரதமரின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டம் (Prime Minister’s Development Initiative for North-East,
PM-DevINE)
பிரதமரின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டத்தின் கீழ் நிதிக் கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொடக்க நிலையில்
1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட் உரையின் போது, மத்திய நிதியமைச்சர் இத்திட்டத்தை அறிவித்தார்.
இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேம்படும் என்றும், பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.
தொலை தொடர்பு துறையில் முக்கிய சீர்திருத்தங்கள்:
தொலை தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்த்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது.
அமைப்பு சீர்திருத்தங்கள்:
- சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் சீரமைப்பு: தொலைதொடர்பு அல்லாத வருவாய் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் வரையறையிலிருந்து விலக்கப்படும்.
- வங்கி உத்திரவாதங்கள் சீரமைப்பு: உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு.
- வட்டி விகிதங்கள் சீரமைப்பு / அபராதங்கள் நீக்கம்.
- இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை.
- அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு.
- எதிர்கால ஏலங்களில் பெறப்படும் அலைக்கற்றைகளை, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைக்கலாம்.
- ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைக்கு அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.
- அலைக்கற்றை பகிர்வு ஊக்குவிக்கப்படும்.
- 9. மூதலீட்டை ஊக்குவிக்க, தொலை தொடர்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.
தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களின் பணப்புழக்க தேவைகளை நிவர்த்தி செய்தல்
- செலுத்த வேண்டிய ஆண்டு கட்டணங்களை 4 ஆண்டுகளை வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.
- கடந்த ஏலங்களில் எடுத்த அலைக்கற்றைக்கான கட்டணங்களை, அந்தந்த ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வகிதங்களுடன், 4 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.
- இந்த வட்டியை பங்குகள் முறையிலும் செலுத்தலாம்.
- செலுத்த வேண்டிய கட்டணத்தை பங்குகளாக மாற்றும் வழிகாட்டுதல்களை மத்திய நிதியமைச்சகம் இறுதி செய்யும்.
5.
சுவாமித்வா திட்டம்:
கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் செய்ய சுவாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது.
விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக (mapping and surveying) நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கிராம சொத்துக்கள் முழுவதும்
ட்ரோன் கருவிகளின் மூலம் ஆய்வு செய்யப்படுவதுடன் உரிமையாளர்களுக்கு சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய அட்டை விநியோகிக்கப்படுகிறது.
கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள
6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் ஆரம்பக் கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.