Home /News /employment /

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு தேதி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு தேதி மாற்றம்

TNPSC குரூப் 1 தேர்வு

TNPSC குரூப் 1 தேர்வு

TNPSC Group 1 Exam : 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    டிஎன்பிஎசி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    முன்னதாக, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் , வணிகவரித்துறை உதவி ஆணையர் , கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி என மொத்தம் 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆள் சேர்ப்பேன் மூலம்  92 பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும் என்றும், முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில்   (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க:  சீருடைப் பணியாளர் தேர்வுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி: தமிழ்நாடு அரசு

    இந்நிலையில், நிர்வாக காரணங்களினால்  முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளது.

    எனவே, குரூப் 1 தேர்வுக்குத்  தயாராகும் மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி