Home /News /employment /

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க

காட்சிப் படம்

காட்சிப் படம்

குஜராத் தங்க பரிமாற்றம் நிலையம்: இந்தியா இன்டர்தேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் என்ற இந்த நிலையமானது பொன் (தங்கம் மற்றும் வெள்ளி) ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் உதவி செய்யும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 1  (92 பணியிடங்கள்) , குரூப் III-ஏ (15 காலியிடங்கள்), குரூப் V-ஏ  (161 காலியிடங்கள்), சிறை அலுவலர் (8 பணியிடங்கள்) ஆகிய தேர்வுகளுக்கு  தயாராகி வரும் தேர்வர்கள் பயன்படும் வகையில் கீழே சில பொது அறிவு தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

  1 . புதிய தொழில்முனைவு தரவரிசைப் பட்டியலில் குஜராத், கர்நாடக முதலிடம்: 

  மாநிலங்களில் புதிய தொழில்முனைவு நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக இந்த தரவரிசைப் பட்டியல் 2018ல் தொடங்கப்பட்டது. தற்போது, 2021-க்கான சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநிலமான மேகாலயா உள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மற்றும் தெலங்கானா மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் ஆகியன உயர்ந்த செயல்திறன் பட்டியலில் உள்ளன.  அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம், அந்தமான், நிகோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகியவை தலைமை வகிக்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

  இதையும் வாசிக்க: அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

  2. டிஜிட்டல் இந்தியா வாரம்:  பிரதமர், டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 –ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார். நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்

  டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-க்கான தலைப்பு: 'புதிய இந்தியாவின் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்' ஆகும்.

  3. 5ஜி அலைக்கற்றை ஏலம்:  

  5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்மூலம், அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

  தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதை விட சுமார் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை 5ஜி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), மிதமான (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக (26 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைவரிசைகளுக்கு ஏலம் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.      

  இதையும் வாசிக்கSSC : 20,000 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய பணியாளர் தேர்வாணையம்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

  4. கரும்புள்ளிச் சிறுத்தை: இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே கரும்புள்ளிச் சிறுத்தைகள் அழிந்துப் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், நமீபியா நாட்டில் இருந்து கரும்புள்ளிச் சிறுத்தையை இந்தியாவுக்குக்  கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு முன்னதாக நமீபியாவுடன் கையெழுத்திட்டது. அதன் அடிப்படையில், நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷியோபூரில் உள்ள குனோ-பல்பூர் தேசிய பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு வேலியடைப்புப் பகுதியில் விடப்பட்டன.

  இதன்மூலம், புலி,சிங்கம்,சிறுத்தைப் புலி, பனிச் சிறுத்தை மற்றும் கரும்புளிச் சிறுத்தை என பிரமாண்ட பூனைகளின் ஐந்து இனங்களும் உள்ள ஒரே நாடாக இந்திய விளங்குகிறது.

  இதையும் வாசிக்க TNPSC: தலைமை செயலகத்தில் நிருபர் பணி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. யார் விண்ணப்பிக்கலாம்?

  5. முதல் தங்க பரிமாற்ற நிலையம்:  

  குஜராத் மாநிலம் காந்திநகரில் நாட்டின் முதல் சர்வதேச தங்கப் பரிமாற்ற நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியா இன்டர்தேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் என்ற இந்த நிலையமானது பொன் (தங்கம் மற்றும் வெள்ளி) ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் உதவி செய்யும்.  தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இந்த நிலையமே நுழைவு வாயிலாகச் செயல்படும். இடைத்தரர்கள் விலைகளை ஏற்றியிருக்க முடியாது.
  Published by:Salanraj R
  First published:

  Tags: TNPSC

  அடுத்த செய்தி