ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : 2023 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வு கிடையாதா? டிஎன்பிஎஸ்சி அட்டவணையில் இருப்பது என்ன?

TNPSC : 2023 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வு கிடையாதா? டிஎன்பிஎஸ்சி அட்டவணையில் இருப்பது என்ன?

TNPSC குரூப் 1

TNPSC குரூப் 1

TNPSC Group 1 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் குரூப் 1 தேர்வுக்கான விவரங்கள் இடம்பெறவில்லை.

தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகளை வெளியிடும். பணியிடங்களுக்கு ஏற்ற தேர்வு முறைகள் மற்றும் தேர்வில் கால அட்டவணை திட்ட அட்டவணையில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் முக்கிய பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்க்கான தகவல்கள் இடம்பெறவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் படி குரூப் - 1 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய  92 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கான முதல் நிலை தேர்வு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிவைக்கப்பட்ட நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. இப்பணி தேர்வுக்கு 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.9 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் - 1 தேர்வுக்கான விவரங்கள் இடம்பெறவில்லை.

Also Read : டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணை வெளியீடு.. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப்4 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு - முழு விவரம்

டிஎன்பிஎஸ்சி-இல் தகவல் படி தற்போது நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு குரூப் - 1 தேர்வுக்கான முதல் நிலை முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு முதன்மை தேர்வுகள் 2023 மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குரூப் - 1 தேர்வுக்காகக் கடுமையாகத் தயாராகியுள்ள தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான குரூப் - 1 தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி விரைவில் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC