Home /News /employment /

TNPSC: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு..

TNPSC: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு..

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

 ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11:59 மணியுடம் நிறைவடைகிறது.

    துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் வெளியிட்டது.

    விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவுடன் நிறைவடைகிறது. இடர்பாடுகளை தவிர்க்க உடனடியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    விண்ணப்பம் செய்வது எப்படி?  

    www.tnpsc.gov.in / www.tnpscexams.inஎன்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஒருமுறைப்பதிவில் தங்களது பதிவு எண்/கடவுச் சொல்லை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.

    விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  (COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES )

    சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும். (பள்ளி, மேல்நிலைப் பள்ளி, டிப்ளமோ அல்லது இணையான கல்வி) ஆகியவைகளின் சான்றிதழ் எண், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: TNPSC Group -1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

    மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும். இதில் முக்கியமானது, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை தமிழ் மொழியில் பயின்று இருந்தால் அதற்கான இடஒதுக்கீடு கோரலாம். மேலும் உடற்தகுதி (உயரம், மார்பின் அளவு) உள்ளிட்ட விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.

    முதநிலைத் தேர்வுக்கு  இரண்டு விருப்ப மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு  ஏதேனும் ஒரு மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Group 1, Job, TNPSC

    அடுத்த செய்தி