ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் இறுதி முடிவுகள் வெளியீடு... தேர்வானவர்கள் பட்டியல் இதோ

TNPSC : இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் இறுதி முடிவுகள் வெளியீடு... தேர்வானவர்கள் பட்டியல் இதோ

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர்

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர்

TNPSC Assistant Public Prosecutor : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கான பணி நியமன இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு மொத்தமாக 50 காலிப்பணியிடங்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்கான அறிவிப்பு 25.08.2021 ஆம் தேதியில் வெளியானது. இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 24.09.2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மேலும் தேர்வில் தகுதியானவர்களுக்கு வாய்வழி தேர்வு 01.12.2022 மற்றும் 02.12.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

தொடர்ந்து, அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 15.12.2022 ஆம் நாள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தற்போது காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 42 பேர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 06.11.2021 ஆம் தேதியில் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் முதன்மை தேர்வுக்குச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 467 பேர் முதன்மை தேர்வை எழுதினர். அதிலிருந்து வாய்வழி தேர்வுக்கு 103 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு தற்போது இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் 42 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வானவர்களின் இறுதி பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Also Read : TNPSC: ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிக்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.. தேர்வு செய்யப்பட்டவரகளின் முழு விவரங்கள்.

தேர்வு, கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு படி காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC