தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆட்டோமொபைல் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 590க்கும் அதிகமான பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு பொறியியல் சார்ந்த பணிகளுக்கான சி.இ.எஸ்.இ. தேர்வை நடத்துகிறது. தற்போது 590க்கும் மேற்பட்ட காலியாக உள்ள ஆட்டோமொபைல் இன்ஜினியர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவி பொறியாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், ஜெனரல் ஃபோர்மேன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் முதல் மே 3ம் தேதி வரை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஷிப்டுகளில் 26 ஜூன் 2022 அன்று தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி சிஇஎஸ்இ அறிவித்துள்ளது.
காலிப்பணியிட விவரங்கள்:
மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் ஆட்டோமொபைல் பொறியாளர் - 4
ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் - 8
உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) - 66
உதவிப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) - 33
தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் - 18
உதவிப் பொறியாளர் (சிவில்) (நீர்வளத் துறை, PWD) - 1
உதவி பொறியாளர் (சிவில்) - 308
ஜெனரல் ஃபோர்மேன் - 7
தொழில்நுட்ப உதவியாளர் - 11
உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
துறை) - 93
கல்வித்தகுதி:
மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் ஆட்டோமொபைல் பொறியாளர் - ஆட்டோமொபைல் (அல்லது) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தால் வழங்கப்படும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போஸ்ட் டிப்ளமோ பெற்றவராக இருக்க வேண்டும்; (அல்லது) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்
ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு மோட்டார் வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அலுவலக நிர்வாகத்திலும் பணிமனைகளின் நிர்வாகத்திலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
also read : டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்: கணினி வழித் தேர்வு அறிமுகம்
ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் - எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் அல்லது அதற்கு சமமான இந்திய அரசின் திட்டம் அல்லது மாநில அரசின் தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்திற்கு தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உதவி பொறியாளர் - பொறியியல் பட்டம்
தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது புரொடக்ஷன் இன்ஜினியரிங் அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
ஆட்டோமொபைல் இன்ஜினியர் - ரூ.56,100 - 20,5700
AE - ரூ.37,700-1,38,500 (நிலை 20)
வயது வரம்பு:
ஆட்டோமொபைல் இன்ஜினியர் - 37 வயது
மற்றவை - 32 வயது
TNPSC AE மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு நடத்தப்படும்
TNPSC CCE ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் செல்லவும்
ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் மூலம் உங்களைப் பதிவு செய்யுங்கள்
பதிவுசெய்த பிறகு, ஒரே பயனர் ஐடி மற்றும் ஒரு முறை பதிவு செய்ய வழங்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கு நேராக "விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்,
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
பதிவுக் கட்டணம் - ரூ. 150/-
தேர்வுக் கட்டணம் - ரூ. 200/-
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs