Home /News /employment /

மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வனத்தொழில் பழகுநர் பணி: இன்றே விண்ணப்பியுங்கள்

மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வனத்தொழில் பழகுநர் பணி: இன்றே விண்ணப்பியுங்கள்

டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு

டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு

மூன்று தாள்கள் உள்ளடக்கிய எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  முதல் தாளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது பாடங்களும், இரண்டாவது, மூன்றாவது தாள்களில்  விருப்பப் பாடங்கள் இடம்பெறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    TNPSC Forest Apprentice: தமிழ்நாடு வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி    விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (06.09.2022) முடிவடைகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உரிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    முன்னதாக, வனசார பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.   இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    மூன்று தாள்கள் உள்ளடக்கிய எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  முதல் தாளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது பாடங்களும், இரண்டாவது, மூன்றாவது தாள்களில்  விருப்பப் பாடங்கள் இடம்பெறும்.



    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 3 முதல் 12ம் தேதி வரை.

    தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

    கல்வித் தகுதி:  வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    ( அல்லது )

    பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்:

    தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

    ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு வெளியானது

    சம்பளம் : ரூ: 37,700 - 1,38,500

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஒருமுறைப்பதிவில் தங்களது பதிவு எண்/கடவுச் சொல்லை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.

    'Current Application' மூலம் , 'Click Here to apply' என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

    இதையும் வாசிக்க:  இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலியிடங்கள்: முழு விவரம் உள்ளே

    விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (FOREST APPRENTICE IN TAMILNADU FOREST SUBORDINATE SERVICE- I (GROUP- IV SERVICES )



    சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும். (பள்ளி, மேல்நிலைப் பள்ளி, டிப்ளமோ அல்லது இணையான கல்வி) ஆகியவைகளின் சான்றிதழ் எண், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி