Home /News /employment /

TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

காட்சிப் படம்

காட்சிப் படம்

எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாடு வனசார் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்: 

    பதவியின் பெயர் : வனத்தொழில் பழகுநர்

    பணியின் பெயர் : தமிழ்நாடு வன சார்நிலைப் பணி

    காலியிடங்கள் : 10

    சம்பளம் : ரூ: 37,700 -  1,38,500

    முக்கியமான நாட்கள்: 

    அறிவிக்கை நாள்: 08.08.2022

    இணையவழி மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 06.09.2022

    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 03.12.2022  (ஒருநாளில் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும்)

    எழுத்துத் தேர்வு மூன்று தாள்களை உள்ளடக்கியது. முதல் ஷிப்ட் காலை 9 மணிமுதல் 12.30 மணிவரையிலும், 2-வது ஷிப்ட் பிற்பகல் இரண்டு  மணிமுதல் ஐந்து மணிவரையிலும் நடைபெறும். 

    கல்வித் தகுதி: 

    வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    ( அல்லது )

    பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்:

    தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

    ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    இதையும் வாசிக்க:  11 பொதுத் துறை வங்கிகளில் 6932 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

    தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி