குருப் -4 தேர்வுக்கான (GROUP 4) அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குரூப் -4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு இணையத்தில் பரவிவந்தது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. மற்ற மாவட்டங்களின் வெயில் அளவு?
தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி -4-க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.