Home /News /employment /

TNPSC வெளியிட்டது புதிய பாடத் திட்டம் இல்லையாம்... அப்போ வெளியானது என்ன?

TNPSC வெளியிட்டது புதிய பாடத் திட்டம் இல்லையாம்... அப்போ வெளியானது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

டிசம்பர் 3, 2021 அன்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC )அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    TNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் தகுதித்தாளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக அரசாணை அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டதாக, கடந்த 23-ம்தேதி டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், அன்றைக்கு வெளியிடப்பட்ட தகவல்கள், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கூறியதாவது-

    குரூப் 4 தேர்வு தேர்வு குறித்த எவ்வித பாடத்திட்டமும் TNPSC இதுவரை வெளியிடவில்லை. புதிய பாடத்திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்து மட்டுமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TNPSC வெளியிட்டுள்ளது.

    குரூப்-4 தேர்வில் முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் பொது ஆங்கில பாடம் இடம்பெற்றது. அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில் குரூப் 4 தேர்வில் பொது ஆங்கில பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்பதை சுட்டிகாட்ட, பழைய பாடத்திட்ட முறை TNPSC இணையதளத்தில் இணைக்கப்பட்டது. இதனால், பொது ஆங்கில பாடம் மீண்டும் கொண்டுவரப்பட்டதா என்கிற குழப்பம் தேர்வர்களுக்க்கு ஏற்பட்டது.

    இந்நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் TNPSC இனையதளத்தில் இடம்பெற்ற பாட்டத்திட்டம் குறித்த விளக்கம் நீக்கப்படுகிறது.
    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க : TNPSC குரூப் 4, விஏஓ தேர்வுகள் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு....

    டிசம்பர் 3, 2021 அன்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC )அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையும் படிங்க : TNPSC: டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட முக்கிய பகுதி

    தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : தமிழ்பாடத்தில் 45 மதிப்பெண்கள் கட்டாயம்: TNPSC தேர்வுகளுக்கு புதிய விதிமுறைகள்?

    இருப்பினும், தமிழக அரசு வேலைகள் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் இந்த அரசாணைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Government jobs, TNPSC

    அடுத்த செய்தி