ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கொரோனா கட்டுபாடுகள்: TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது

கொரோனா கட்டுபாடுகள்: TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் , ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொரோனா மற்றும்  ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போகின்றன . இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ,

ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9ம் தேதியும், தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22ம் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், கொரோனா மற்றும்  ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே  நடைபெற இருந்த தேர்வுகள் , மாற்று தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை TNPSC அறிவிக்க உள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Corona impact, Government jobs, Tamilnadu government, TNPSC