Home /News /employment /

TNPSC Current affairs 10: சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

TNPSC Current affairs 10: சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

காட்சி படம்

காட்சி படம்

ராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்தவர் குயிலி. சுதந்திர இயக்கத்தின் முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டார்.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2/2A,4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு என்ற தலைப்பில் சிலவற்றை இங்கு காணலாம்.

  ராணி வேலு நாச்சியார்இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

  வேலு நாச்சியார் - காட்சி படம்


  ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்: 1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். ஹைதர் அலி, கோபாலா நாயகக்கர் ஆகியோரின் உதவியுடன் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கி ஆங்கிலேயர்களை வீழ்த்தினார்.  1780ம் ஆண்டு வேலுநாச்சியார்  தனது அதிகாரத்தை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்தார்.      குயிலிராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்தவர் குயிலி. உடையார்படை என்ற எதிர்ப்புப்படை கட்டியமைத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. சுதந்திர இயக்கத்தின் முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்க உடலில் தீ வைத்துக் கொண்டார்.

  வா.ஊ. சிதம்பரம்  பிள்ளை:   வ.உசிதம்பரம் பிள்ளை ஒரு வழக்குரைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். 1905ம் வங்காளப் பிரிவினைக்கு எதிரான  தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். பால கங்காதர திலகரின் சீடராக அவர் திகழ்ந்தார். 

  1908ல் தூத்துக்குடியில் நடைபெற்ற பவழ ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை (Tuticorin Coral Mills strike) முன்னின்று நடத்தினார் (1917ல் காந்தி மேற்கொண்ட சம்பரண் சத்தியாகிரக போராட்டத்தின் முன்னோடியாக இது பார்க்கப்படுகிறது ).

  1906ல் தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவினர் (Swadeshi Steam Navigation Company (SSNCo).). எனவே. 'கப்பலோட்டிய தமிழன்' என்று அவர் அழைக்கப்பட்டார். கதேசி நீராவிக்கப்பல் கழகத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்திற்குமிடையே (British Indian Steam Navigation Company Ltd) கடுமையான போட்டி நிலவியது. பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்தை புறக்கணிக்குமாறு வ.உ.சி. பிரச்சாரம் செய்தார்.

  இதனால் 1908 மார்ச் திங்களில் திருநெல்வேலி கலகம் நடைபெற்றது. இவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர் சுப்ரமணிய சிவா. இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆறு ஆண்டு காலம் கடும் சிறைவாசத்தை இருவரும் அனுபவித்தனர். சிறைக்குள் அவர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்பட்டனர். செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானதால், வ.உ.சி. செக்கிழுத்தச் செம்மல்" என்று அழைக்கப்பட்டார்.   இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்ட நூல்களை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார்.

   சுப்ரமணிய சிவா:  தனி தமிழ் இயக்கத்தை (Pure Tamil movement) தோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம் பிரபலப்படுத்தினார். அவர் வஉசி மற்றும் பாரதி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். திலகரின் கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களை வன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவா ஊக்குவித்தார்.

  சென்னை சிறையில் முதல் அரசியல் கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல் தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்கு ஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்கு வெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவா வற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

  வாஞ்சி நாதன்:  தேசியத் தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது, சிறைக்குள் சித்ரவதைகளுக்குட்படுத்தப்பட்டது, சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால் சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர். இதில், நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும். இச்சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜூன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி.ஆஷ். என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்.

  லீலாவதி அம்மையார்விடுதலைப் போராட்ட வீரரும் சமூகப் போராளியுமான லீலாவதி அம்மையார் சுதேசி இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததற்காக மூன்று முறை சிறை சென்றார். குறிப்பாக 1941-டிசம்பர்-1-இல் சென்னை எழும்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  Published by:Salanraj R
  First published:

  Tags: TNPSC

  அடுத்த செய்தி