முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி

செப்டம்பர் 23-ஐ சர்வதேச சைகை மொழி தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது

  • 1-MIN READ
  • Last Updated :

TNPSC Current Affairs Preparation: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன. பொது அறிவுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

பெண்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய/மாநில அரசுகள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தினம்:  ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி,  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உள்ளார்ந்த திறன்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

சைகை மொழி தினம்:  செப்டம்பர் 23-ஐ சர்வதேச சைகை மொழி தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை,    இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Indian Sign Language Research and Training Centre -ISLRTC) கொண்டாடி வருகிறது. இந்த மையம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் "இந்திய சைகை மொழி" குறித்த அலங்கார வாகனம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு கவனம் பெற்றது.

தேசிய விருதுகள்:  இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கப்படுகிறது.

சிறந்த மாற்றுத்திறனாளி தொழிலாளி / சுய தொழிலாளி, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளித்த நிறுவன அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக பணியாற்றிய தனிநபர்கள், அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான புதிய கண்டுபிடிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கிய சிறந்த மாவட்டம், மாநிலம் (தமிழ்நாடு - கீழே காண்க), சிறந்த ப்ரெய்லி அச்சகம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத்திறனாளி குழந்தை, சிறந்த மாற்றுத்தினாளி விளையாட்டு வீரர் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முதலிடம்: 

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக மத்திய அரசானது 'சிறந்த மாநிலம்" என்ற தேசிய விருதினை சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான நாளில் தமிழகத்துக்கு வழங்கியது.  ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கியது, மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ்கள் வழங்கியது போன்ற காரணங்களுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டது.

TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள  அட்டை  (UDID Card) :  

நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கவும், அனைத்துப் பயன்களைப் பெறவும் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC Current Affairs: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

மருத்துவ அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சான்றிதழ்களை  பதிவேற்றம் செய்து இந்த அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

உரிமைகள் திட்டம் (The RIGHTS PROJECT) : இதுவொரு,  மாநிலத் திட்டமாகும்.   

தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையினை மேலும் மேம்படுத்த, உலக வங்கியின் உதவியுடன்,"உரிமைகள் திட்டம்" (RIGHTS PROJECT) என்ற திட்டத்தினை ரூ.1,702.00 கோடி நிதியில் செயல்படுத்த தொடங்கியுள்ளது. உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது, தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையான, மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில், " உள்ளடக்குதல், அணுகுதல், சமாய்ப்புகளை அளித்தல்" ஆகிய மூன்று முக்கியக் கூர்களை  கொண்டுள்ளது.

First published:

Tags: TNPSC