வரும் 24ம் நாள் தேதி 7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு நடை பெறயிருக்கிறது. லட்சக்கணக்கான தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில சமீபத்திய தலைப்புகளை இங்கே காணலாம்.
10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா எட்டியது:
2018 ஆம் ஆண்டு 'உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையை (National Policy on BioFuel) மத்திய அரசு அறிவித்தது. இதில், 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், ஊக்கமளிக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, 20 % எத்தனால் கலவை இலக்கு 2030, முன்கூட்டியே 2025-26 –க்கு நிர்ணயிக்கப்பட்டது.
2020-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனால் கலப்படத்திற்கான வழிமுறை ஜூன் 2021 இல் பிரதமரால் வெளியிடப்பட்டது. இது 20% எத்தனால் கலவையை அடைவதற்கான விரிவான பாதையை வழங்குகிறது. நவம்பர் 2022 க்குள் 10% கலவையை அடைய வேண்டிய இடைநிலை மைல்கல்லையும் இது குறிப்பிடுகிறது.
இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, திட்டத்தின் கீழ் 10% கலப்பு இலக்கானது 2022 நவம்பர் இலக்கு என்னும் காலக்கெடுவை விட மிகவும் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது.
2. கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது:
தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு:
திருவனந்தபுரத்தில் தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022 நடைபெற்றது.
4. இந்தியா கவுரவத்திற்குரிய நாடு:
பிரான்சில் நடைபெற்ற 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் இடையே நடைபெறும் மார்சே டு பிலிம் (Marche’ Du Film) எனப்படும் திரைப்பட சந்தையில், அதிகாரபூர்வ ‘கவுரவத்திற்குரிய நாடு’ அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
“மார்சே டு பிலிம் திரைப்படசந்தையில், அதிகாரபூர்வ ‘கவுரவத்திற்குரிய நாடு’அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
5. 17-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17-வது பதிப்பு கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
6. அமிர்த சரோவர்: நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் என்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது. சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை குறிக்கும் வகையில் இத்திட்டத்தை பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி தொடங்கி வைத்தார்.
7. மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா: தமிழக சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் பயிற்சி அளிக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து 388 ஒன்றியங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25.66 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்தது.
8. NATGRID: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பை (NATGRID) திறந்து வைத்தார். புலனாய்வு முகமைகளுக்கு தேவையான தரவுகளை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. ஜிஎஸ்டி வருவாய்: சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது
10. பாலைவனமாதல்: கோட் டி’ஐவரியில் நடைபெற்ற பாலைவனமாதலை தடுக்கும் ஐ.நா சபையின் (UNCCD) மாநாட்டின் பதினைந்தாவது அமர்வில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 14-வது அமர்வை புதுதில்லியில் நடைபெற்றது. இதன் தற்போதைய தலைவராகவும் இந்தியா செயல்படுகிறது.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.