Home /News /employment /

TNPSC Current Affairs 10: குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு தலைப்புகள் இங்கே

TNPSC Current Affairs 10: குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு தலைப்புகள் இங்கே

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு வளர்ந்த நாடு ஒன்றுடனான இந்தியாவின் முதல் வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில சமீபத்திய தலைப்புகளை இங்கே காணலாம்.

    1. தேசிய நில பணமாக்கல் கழகம் (National Land Monetization Corporation):

    மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரி நிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.

    முற்றிலும் அரசுக்குச் சொந்தமான இந்திய அரசு நிறுவனமாக தேசிய நிலச் சொத்து பணமாக்கல் கழகம் (NLMC) உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5,000 கோடி தொடக்கநிலை பங்கு மூலதனமும் ரூ.150 கோடி பங்கு விற்று முதல் மூலதனமும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    2. இந்தியா- யுஏஇ விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (India-UAE Comprehensive Economic Partnership Agreement) : 

    இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே, 2022 பிப்ரவரி மாதம் 18-ந் தேதி விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ)  கையெழுத்தானது.



    இந்த ஒப்பந்தத்தின் படி,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு நமது மொத்த ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 90 சதவீத பொருட்களுக்கு உடனடியாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது

    3. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Economic Cooperation and Trade Agreement (ECTA) between India and Australia) :  

    பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு வளர்ந்த நாடு ஒன்றுடனான இந்தியாவின் முதல் வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.



    இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான அமைப்புரீதியான செயல்முறையை ஒப்பந்தம் வழங்குகிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவால் கையாளப்படும் அனைத்து கட்டண வரிகளையும் உள்ளடக்கியது ஆகும். ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஜவுளி, தோல், காலணி, தளவாடங்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் இதில் அடங்கும். மறுபுறம், தனது 70%-க்கும் மேற்பட்ட கட்டண வரிகளில் ஆஸ்திரேலியாவிற்கு முன்னுரிமை அணுகலை இந்தியா வழங்கும்.

    TNPSC Current Affairs 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே

    4.  பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் (WHO Global Centre for Traditional Medicine) :  

    குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.



    இது, உலகின் முதலாவது மையமாக விளங்குவதோடு பாரம்பரிய மருத்துவதற்கான ஒப்பந்த வேலை அமைப்பு கொண்ட சர்வதேச மையமாகவும் இது செயல்படும்.

    TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்

    5. பிரதமர்களின் அருங்காட்சியம்: 

    நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் பங்களிப்பை  நினைவு கூரும் வகையில் புதுடெல்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  இந்த  அருங்காட்சியத்தை தொடங்கி வைத்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி