முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Current Affairs 4: பொது அறிவுப் பிரிவில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

TNPSC Current Affairs 4: பொது அறிவுப் பிரிவில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

TNPSC Current Affairs Preparation Part 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A தேர்வு, குரூப் 4 தேர்வு, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவதற்கான வழிகாட்டி இங்கே

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

TNPSC Current Affairs Preparation Part 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன. பொது அறிவுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை  மேற்கொண்டு வருகின்றன. சில புதிய முன்னெடுப்புகள் பல்வேறு வழிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, சில புதிய முன்னெடுப்புகள் தொடர்பான  தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

நாட்டின் ஓட்டுநர் இல்லா முதல் ரயில் போக்குவரத்தை, டெல்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில் (Janakpuri West – Botanical Garden), பிரதமர் மோடி, 2020 டிசம்பர் 28ம் தேதி தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள்?

இதனையடுத்து, கடந்த 2021 நவமபர் 25ம் தேதி,  டெல்லி மெட்ரோவின் பிங்க் லைன் வழித்தடத்தில்  (59 கி.மீ)   ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையை (UTO) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ். பூரி தொடங்கி வைத்தார். 

மொத்தம் 97 கி.மீ ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சாதனை மூலம், இது போன்ற வசதிகள் இருக்கும் உலகின் நான்காவது பெரிய மெட்ரோவாக டெல்லி  மாறியுள்ளது.

2. உலகிலேயே முதல் நாடாக மாலுமிகள் முகத்தின் வழியான பயோமெட்ரிக் அடையாள ஆவணத்தை இந்தியா வழங்குகிறது (Bio-Metric Data Based Seafarer Identity Document).  இந்த ஆவணம் நமது மாலுமிகளை முழுமையாக அடையாளம் காண்பதற்கு உதவுவதோடு, உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் அடையாளம் காணவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

3. முதல் ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வார நிகழ்ச்சியை (FIRST EVER Startup India Innovation Week) 2021,  ஜனவரி 10 முதல் 16 வரை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை (Department for Promotion of Industry and Internal Trade) நடத்தியது.

40-க்கும் அதிகமான முன்னணி புதிய நிறுவனங்கள் (யூனிகார்ன்) 2021-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2021-ம் வருடம் யூனிகார்ன்களின் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.

4. நாட்டில் முதன்முறையாக இந்திய பொம்மை கண்காட்சி கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். நாட்டில் 85% பொம்மைகள் வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்ற வேண்டி மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

5. நாட்டின் முதன்முறையாக, பீகார் பாட்னாவிலிருந்து பாண்டுவுக்கு (குவஹாத்தி) வங்கதேசம் வழியாக (Indo Bangladesh Protocol Route) உணவு தானியங்களை எடுத்துச் செல்லப்பட்டது.  கப்பலின் பெயர் - எம்வி லால் பகதூர் சாஸ்திரி கப்பல்

6. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 20வது மாநாடு முதன்முறையாக டெல்லிக்கு வெளியே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.

7. மணிப்பூர் தமெங்லாங் மாவட்டத்தில் ராணி கைடின்லியு (Rani Gaidinliu) ரயில் நிலையத்துக்கு முதல் சரக்கு ரயில் சென்றடைந்தது.

இதன் மூலம், மணிப்பூர் மாநிலத்துக்கான இணைப்பு அதிகரிக்கப்படும் மற்றும் வர்த்தகம் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. எலக்ட்ரோலைசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியுடன் கூடிய தனித்த எரிபொருள்-செல் அடிப்படையிலான மைக்ரோ-கிரிட் திட்டத்தை சிம்ஹாத்ரியில் (விசாகப்பட்டினத்திற்கு அருகில்) உள்ள என்டிபிசி விருந்தினர் மாளிகையில் என்டிபிசி அமைத்துள்ளது.

இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிசக்தி சேமிப்பு திட்டம் இதுவாகும்.

8.  சவுதி அரேபிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபகத் பின் அப்துல்லா முகமது அல்-முதைர்  கடந்த பிப்ரவரி மாதம்  இந்தியா வந்தார். சவுதி ராணுவ தளபதி இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.  இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் .நரவாணே, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

9.  வடகிழக்குப் பகுதிகளில் இருந்து புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாகாலாந்தில் இருந்து 'மிளகாயின் அரசன்’ (‘Raja Mircha’ , king chilli)என்று அழைக்கப்படும் மிளகாய் வகை முதன்முறையாக குவஹாத்தி வழியாக லண்டனுக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த வகை மிளகாய் உலகின் மிக காரமான மிளகாய் என்று கருதப்படுகிறது.

10. இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் மாநாடு ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்றது.

11. தண்ணீர் குறித்த தரவுகளை சேகரிக்கவும் விதமாக நாட்டின் முதல் Digital Water Data Bank தொடங்கப்பட்டது.

முதன் முறையாக மகளிர் படகுப் பயணத்தை(சென்னை – விசாகப்பட்டினம் – சென்னை) தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

First published:

Tags: TNPSC, UPSC