Home /News /employment /

TNPSC Current Affairs 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே

TNPSC Current Affairs 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே

மாதிரி படம்

மாதிரி படம்

TNPSC Exam | 2022-ம் ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2/2A,4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில முக்கிய பொது அறிவுத் தலைப்புகளை நியூஸ்18 தளம் வழங்கி வருகிறது.

 1.  மலேரியா: 

மலேரியா நோய்க்கு முதல் முறையாக Mosquirix (RTS,S) எனும் தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையில், அந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 25-ந் தேதி ‘உலக மலேரியா தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. “மலேரியா நோயை 2030-க்குள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற  இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.இந்தியாவில் மலேரியா பாதிப்பு  குறைந்துவருவதாக உலக மலேரியா அறிக்கை 2021 தெரிவித்துளளது. உலகின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிகையில், இந்தியாவின் பங்கு 1.2% ஆக உள்ளது.

TNPSC Current Affairs 7: முக்கிய நிகழ்வுகளும், அதன் பின்னணி விபரங்களும்

2. மன்னர் வளைக்குடாப் பகுதிகளில் மிதக்கும் காற்றாலை:

இந்திய நாட்டில் முதன் முறையாக மிதக்கும் காற்றாலை பண்ணை (கடலுக்கு மேல் மிதக்கும் காற்றாலை வசதி) தமிழகத்தில் நிறுவப்பட இருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதல்கட்டமாக இந்த மிதக்கும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, டென்மார்க் நாட்டில் இருந்து 5 முதல் 10 பில்லியன் அமேரிக்கா டாலர் முதலீடு செய்ய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.   (FMN) பட்டாம்பூச்சி:  

Silver Forget-Me-Not (FMN) பட்டாம்பூச்சி என்ற அரியவகை பட்டாம்பூச்சி திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் கண்டறியப்பட்டது.தமிழகத்தில் கண்டறியப்பட்ட 318வது பட்டாம்பூச்சி இதுவாகும்.

4. 2022 பத்ம ஸ்ரீ விருதுகள் :

இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன .

4. பத்ம விபூஷன் விருது  பெற்றவர்கள்: 

டாக்டர். பிரபா ஆத்ரே, கல்யாண் சிங் (மறைவுக்கு பிந்தைய),  பிபின் ராவத் (மறைவுக்குப் பிந்தைய) ராதேஷ்யம் கெம்கா (மறைவுக்குப் பிந்தைய) ஆகிய நால்வருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அளிக்கப்பட்டன.

தமிழகத்தைச் சேர்நத 7 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டது.நடராஜன் சந்திரசேகரன்பத்ம பூஷண் -வர்த்தகம்
சௌகார் ஜானகியின்பத்ம ஸ்ரீ - கலை
சிற்பி பாலசுப்பிரமணியம்இலக்கியம் - பத்ம ஸ்ரீ
எஸ்.தாமோதரன்சமூக சேவை - பத்ம ஸ்ரீ
பழங்கால நடன வடிவமான சதிர் நடனக்கலைஞர் ஆர்.ஆர் முத்துகண்ணமாள்கலை  - பத்ம ஸ்ரீ
கர்நாடக நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி நடராஜன்கலை - பத்ம ஸ்ரீ
மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யாமருத்துவம் - பத்ம ஸ்ரீ
கஜல் பாடகர், செனாய் இசைக் கலைஞர் பல்லேஷ் பஜேந்தர்கலை - பத்ம ஸ்ரீ

5.  எம்.ஆர். நவஜித்: 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும் தமிழில் தலைகீழாக வேகமாக எழுதி, International Book of Records, Asia Book of Records, India Book of Records 2022 ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்ற சென்னை சேர்ந்த மாணவன் எம்.ஆர். நவஜித்.

6. அமர்ஜவான் ஜோதி இடமாற்றம்:

புதுதில்லி இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் கடந்த ஜனவரி மாதம் இணைக்கப்பட்டது.

 முதலாம் உலகப்போரின் போது உயிர்தியாகம் செய்த பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக கடந்த 1931-ஆம் ஆண்டு இந்தியா கேட் அமைக்கப்பட்டது.

1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு அதில் அணையா விளக்கு நிறுவப்பட்டது.

பின்னர் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா கேட்டில் தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. இதில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

7. 151-வது ஜோதி தரிசன விழா: 

ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்ய ஞான சபையின் 151-வது ஜோதி தரிசன விழா கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது.

8. எல்ஐசி பங்கு விற்பனை:  மத்திய அரசு, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான  எல்ஐசியில் வைத்திருந்த தனது பங்குகளில் மூன்றரை சதவீதத்தை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இம்மாதம் 4ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  

TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

9. தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் (National asset monetisation pipeline): 

2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசு தன்னிடம் உள்ள முக்கிய சொத்துக்களை  பணமாக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தவும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

சொத்தின் உரிமை மத்திய அரசிடம் தான் இருக்கும்.வருவாய் மட்டும் தனியார் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும்.


இதன் வாயிலாக,  ஒட்டுமொத்த பணமாக்கல் திறன் ரூ. 6.0 லட்சம் கோடியாக இருக்கும் என்று தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் மதிப்பீடு செய்துள்ளது.

TNPSC Current Affairs Part 5: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகளின் பட்டியல் இங்கே

10. நாட்டின் முதல் கிராபீன் (Graphene) புத்தாக்க மையம் (country’s first Graphene Innovation Centre) கேரளாவில் அமையவுள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Group 2, Group 4, TNPSC

அடுத்த செய்தி