ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

Hindu Religious and Charitable Endowments Department: இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : 42

பதவியின் பெயர்: செயல் அலுவலர், நிலை III

பணியின் பெயர் : தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய சார்நிலைப் பணி

சம்பளம் : ரூ . 20,600–75900

இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய நாட்கள்: 

அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 19.05.2022

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 17.06.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2022

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கபபடும் . காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

கல்வித் தகுதி: 10+2 அல்லது இணைக் கல்வித் தகுதி மற்றும் இளங்கலையில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்திடம் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 100

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.             

01.07.2022 அன்றுள்ளபடி, 25 வயது நிறைவடைந்தவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தெளிவுரைவேண்டுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

Direct recruitment to the post of Executive Officer,

Grade-III included in Group-VII-B Services

First published:

Tags: Hindu Endorsements Dept, TNPSC