ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 3ஏ எழுத்துத் தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

குரூப் 3ஏ எழுத்துத் தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

குரூப்3 ஏ தேர்வு

குரூப்3 ஏ தேர்வு

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட குரூப்3 ஏ பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்ததது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு, 15 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட குரூப்3 ஏ பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு 2023, ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 3-ஏ எழுத்துத் தேர்வு - தேர்வு திட்டம்

அரியலூர், செங்கல்பட்டு, விருதுநகர் உள்ளிட்ட 38 மாவட்டங்களில்  28.01.2023 முற்பகல் 3 மணி நேர கால அளவில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: TNPSC Group 4 Exam: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?

இந்நிலையில் , தேர்வு மையங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது. அதன்படி,   28.01.2023 குரூப் 3ஏ   பதவிக்கான எழுத்துத் தேர்வு, சென்னை, மதுரை, கடலூர், கோவை, காஞ்சிபுரம், நாகர்கோயில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 15 மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  

இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு கேள்விகள் கசிவு? தேர்வர்கள் அதிர்ச்சி

First published: