Home /News /employment /

TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

TNPSC Current affairs-6 | மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உலக புத்தாக்க குறியீட்டின் (Global Innovation Index) 2021 ஆம் ஆண்டு பதிப்பில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  டிஎன்பிஎஸ்சி-ன் குரூப் 2/2A தேர்வு தேர்வு இன்னும் மூன்று வாரங்களில் நடைபெற இருக்கிறது. எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன. பொது அறிவுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

  மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. சில புதிய முன்னெடுப்புகள் பல்வேறு வழிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, சில புதிய முன்னெடுப்புகள் தொடர்பான தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

  1 . Raising and Accelerating MSME Performance (RAMP): உலக வங்கியின் உதவியுடன் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்” திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 6,062.45 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

  திட்டத்திற்கான மொத்த செலவு ரூ 6,062.45 கோடி அல்லது 808 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் ரூ 3,750 கோடி அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடனாக பெறப்பட்டு, மீதமுள்ள ரூ 2,312.45 கோடி அல்லது 308 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசால் நிதியளிக்கப்படும்

  "சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்" என்பது உலக வங்கியின் உதவியுடனான மத்தியத் துறைத் திட்டமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது.

  TNPSC Current Affairs Part 5: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகளின் பட்டியல் இங்கே

  2. இந்தியாவின் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி வெளியிட்டார்.

  அஞ்சல் தலையில் கோவாக்சின் தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.


  3. தேசிய ஒற்றை சாளர அமைப்பு: எளிமை மற்றும்   வெளிப்படைத்தன்மையுடன் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்க தேசிய ஒற்றை சாளர அமைப்பு முறையில்  (National Single Window System ) மத்திய  வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் உருவாக்கியது.  32 மத்திய அமைச்சகங்களின் துறைகளும், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்களும் இதில் இணைந்துள்ளன. இதில், இணைந்த முதல் யூனியன் பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஆகும்.

  TNPSC Current Affairs Part 5: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகளின் பட்டியல் இங்கே

  4. இ-ஷிராம் தளம்: நாட்டில் உள்ள38 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு (Unorganised Workers) மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு சேர்க்கும் விதமாக இ-ஷிராம் தளத்தை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்யது.

      

  மேலும், இ-ஷிராம் தளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள ஒவ்வொரு அமைப்புசாரா தொழிலாளருக்கும் ரூ 2 லட்சம் விபத்து காப்பீட்டு வழங்கப்படுகிறதுதற்போது, 10 கோடிக்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.    

  5. நிபுன் பாரத் திட்டம் : 

  மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்துகொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை (நிபுண் பாரத்) மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார்.

  TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  6. ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் (Export Prepardness Index) :  நித்தி ஆயோக், போட்டித் திறன் மையத்துடன் இணைந்து ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் 2021-ஐ 2022 மார்ச் மாதம்  வெளியிட்டது. குஜராத் மாநிலம் 2வது முறையாக முதலாவது இடத்தில் உள்ளது.  கொள்கை, வர்த்தகச் சூழல், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயல்பாடு என்ற 4 முக்கிய அம்சங்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத் தரவரிசைபடுத்துகிறது. இதில் 11 துணை அம்சங்களும் உள்ளன

  7. மாநில சுகாதாரக் குறியீடு (Niti Aayog State Health Index) 

  2019-20-ம் ஆண்டிற்கான மாநில சுகாதாரக் குறியீட்டின் நான்காவது பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டது. "ஆரோக்கியமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா" என்ற தலைப்பிலான அறிக்கை, சுகாதார செயல்பாடுகளில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது.

  2019-20-ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த தரவரிசையின் படி, பெரிய மாநிலங்களின் வரிசையில் கேரளா மற்றும் தமிழ்நாடு முன்னணியிலும், சிறிய மாநிலங்களில் மிசோராம் மற்றும் திரிபுரா முன்னணியிலும், யூனியன் பிரதேசங்களில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையு மற்றும் சண்டிகர் முன்னணியிலும் உள்ளன.

  8. நல்லாட்சிக் குறியீடு (Good Governance Index) : 

  நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை , நல்லாட்சி தினத்தன்று (டிசம்பர் 25, Good Governance day) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.  இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

  9. உலக புத்தாக்க குறியீடு (Global Innovation Index) :

  உலக புத்தாக்க குறியீட்டின் (Global Innovation Index) 2021 ஆம் ஆண்டு பதிப்பில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  கார்னெல் (Cormell) பல்கலைக்கழகம், இன்ஸிட் (INSEAD) அமைப்பு மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் (World intellectual Property Organisation) ஆகிய அமைப்புகள் ஆண்டுதோறும் உலக புத்தாக்க குறியீட்டை  வெளியிட்டு வருகிறது.

  TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

  10. இந்திய புத்தாக்க குறியீடு:

  இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு டி.ஐ.பி.பி., ( தொழில்கொள்கை மற்றும் மேம்பாடுத் துறை ) இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ). ஆகியவற்றுடன் நிதி ஆயோக் இணைந்து, இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புக் குறியீடு (Indian Innovation Index)  அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் முதல் ஆன்லைன் புத்தாக்க குறியீட்டு போர்ட்டல் மூலம், நாடு முழுமைக்குமான கண்டுபிடிப்புகளை மாநிலங்கள் வாரியாக சரியான நேரத்தில் பதிவுசெய்ய முடியும்.
  Published by:Salanraj R
  First published:

  Tags: Group 2 exam, Group 4, TNPSC

  அடுத்த செய்தி