ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

TNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நீங்கள், முழுநேரமாக டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால் இந்தக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

TNPSC Govt Examination:  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள், அரசுப் பணிகளுக்கு தேவையான தகுந்த நபர்களை அடையாளப்படுத்துகின்றதா? என்ற கேள்வி ஒருபுறம்  இருந்தாலும், இளைஞர்கள் உயர்ந்த இலக்கை அடையவும், திறன்களை வளர்த்துக் கொண்டு மேனிலை நோக்கி நகரவும் இந்த போட்டித் தேர்வுகள் தடையாக இருக்கிறதா? என்ற கேள்வியும் இங்கு முக்கியத்தும் பெறுகிறது.

இன்றைய சமகால பின்னணியில், இளைஞர்கள்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை உயர்த்தும் தலமாகவும், பலமாகவும் அரசு வேலைவாய்ப்புகள் திகழ்கின்றன. அதே சமயம், அரசு துறைகளில் உள்ள பெரும்பாலான காலியிடங்கள், 'போட்டித் தேர்வுகள்' மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில், ஆசிரியர், உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை பணியாளர் என 90%க்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் போட்டித் தேர்வுகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. சமீபத்தில், நடைபெற்ற  7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

களநிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று, தனியார் துறையை விட அரசு வேலைவாய்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு எண்ணக்கருவாக அமைந்துள்ளதை பல்வேறு தரவுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன் பதிவு செய்துவிட்டு கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கTNPSC Group 4 Result | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தின் போது,  டிஎன்பிஎஸ்சி சில தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததது. அடுத்த கட்ட தேர்வு அறிவிக்கைகள் எப்போது வெளியாகும் என்ற தெரியாத நிலையிலும் கூட, பல லட்சம் தேர்வர்கள் தனியார் வேலைக்கு செல்லாமல் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர்.

அதன்பின், இந்தாண்டு தொடக்கத்தில் குரூப் 2, குரூப் 4, குரூப் 1 என  தேர்வு அறிவிக்கைகள்  தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இந்த போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை இல்லாத வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2019ல் நடைபெற்ற  குரூப் 4 தேர்வுக்கு வெறும் 16.2 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், 2022ல் இந்த எண்ணிக்கை 22 லட்சம் ஆகும்.

முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தி, பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த காலகட்டத்தில், கல்லூரி படிப்புகளில் முடித்த இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்கான தயாரிப்பிலே தொடர்ந்து கவனம் செலுத்தியதாகவும், சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்ற திறன்கள் பெறாமல் குறைந்த சம்பளம் பெறும் வேளையில் பணியமர்த்தப்பட்டதாகவும் Kunal Mangal என்ற ஆய்வாளர் தனது ஆய்வுக் கட்டுரையில் (The Long-Run Costs of Highly Competitive Exams for Government Jobs) தெரிவிக்கிறார். மேலும், இந்த விண்ணப்பதாரர்கள், திருமணம் செய்து கொள்வதை தள்ளி வைத்ததாகவும், தாய் தந்தையை அதிகம் சார்ந்து இருக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

1. டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம்  (Selection Rate: Total Job position/ total job applicant) 1%க்கும் குறைவாக உள்ளது.

2. கொரோனா தொற்றுக்குப் பிறகு, பல்வேறு திருப்பங்களை   உலக பொருளாதாரம் சந்தித்து வருகிறது. தனியார் துறையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய தொரு, நெருக்கடி மாநில அரசுக்கு ஏற்படாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவது குறித்து மாநில நிதி அமைச்சரும் அவ்வப்போது பேசி வருகிறார்.  எனவே, வரும் நிதியாண்டில் ஆட்சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தி வைக்க வில்லை என்றாலும், அறிவிப்புகள் சற்று குறையலாம்  என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: தாட்கோ SEPY திட்டம்: நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்... திட்டமிட்டே வங்கிகள் புறக்கணிக்கிறதா?

3. நீங்கள், முழுநேரமாக டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால், தொலைதூரக் கல்வி மூலம் சான்றிதழ் பெறுவது, கணினி , தட்டச்சு சான்றிதழ் பெறுவது, ஆங்கில அறிவை வளர்ப்பது, பகுதி நேர வேலை மூலம் வருவாய் ஈட்டுவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. மேனிலை நோக்கிய ஒரு சமுக அசைவியக்கத்துக்கு நீங்கள் தொழிற் பட வேண்டும்.    

First published:

Tags: TNPSC