குரூப் 2 பணிகளுக்கான தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கு இம்மாதம் 21ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, 21ம் தேதி (சனிக்கிழமை) திட்டமிட்டப்படி குரூப் 2 தேர்வு நடைபெறும். சென்ற ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் தேர்வர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர். 11,78,175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். 4, 96,247 ஆண்கள், 6, 81,880 பெண்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 44 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
காலை 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும். 9 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள். 38 மாவட்டங்களில் 117 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. 323 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோட் செய்வது எப்படி?
அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,842 நபர்கள் தேர்வு எழுதவுள்ளனர். நீலகரியில் 3 மையங்களில் 5,624 நபர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத முடிவில் வெளியாகும் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.