ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகள் கீழ் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் உள்ள பணியிடங்களுக்குத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு 20.10.2021 ஆம் நாள் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.01.2022 ஆம் நாள் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களில் தரவரிசையை 22.03.2022 ஆம் நாள் வெளியிட்டனர்.
இந்த தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பதவிக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில் இப்பதவிகளுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 28.12.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
மேற்படி மூலசான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள்/ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்குத் தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதார்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் Email மூலம் தெரிவிக்கப்படும். மேலும் அவை தபால் மூலமும் அனுப்பப்படும்.
கலந்தாய்வு அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.tnpsc.gov.in/English/
கலந்தாய்வு நடைபெறும் இடம் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம்,
தேர்வாணையச் சாலை,
சென்னை - 03.
தேர்வானவர்களில் பட்டியல்: https://www.tnpsc.gov.in/Document
அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தவறாமல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமனம் செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC