ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணியிடங்களுக்கு தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது அல்லாமல் கூடுதலாக பொறியாளர், குழந்தை பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்களின் விவரம்:
தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04
ஊதியம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
இளநிலை மின் ஆய்வாளர் - 08,
உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66,
உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) - 33,
இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18
உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) - 01
உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) - 1+ 307
முதலாள் - 07
தொழில்நுட்ப உதவியாளர் - 11
உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 93
மேற்கூறிய பணியிடங்களுக்கான ஊதியம்: ரூ. 37,700 - 1,38,500
உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64
உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) - 13
ஊதியம்: மாதம் ரூ.37,700 - 1,38,500
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதையும் படிங்க: TNPSC Group 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்துக்கு... இன்னும் 10 நாள் தான் உள்ளன...
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.200 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள், ரூ.150 செலுத்தி அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 26.06.2022, காலையில் தாள் ஒன்று மற்றும் மதியம் தாள் 2 ஆகிய தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2022
மேலும் விவரங்களுக்கு: ஆங்கிலம்- https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf
தமிழ்- https://tnpsc.gov.in/Document/tamil/2022_10_CESE_tam.pdf
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, TNPSC