ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

TNPSC | ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

TNPSC | ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

TNPSC | ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

TNPSC Group IV:  தமிழக அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் - 4) பணிகளுக்கான விண்ணப்ப படிவங்களை வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்பமதரா சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை நாள்30.03.2022
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிபதற்குரிய கடைசி நாள்28.04.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்24.07.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexamsin ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒரு முறைப் பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு (OTR) மற்றும் தன்விவரப் பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு முறைப் பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச்சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஒரு முறைப் பதிவில் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD;DVD/Pen drive போன்ற ஏதேனும் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time RegistrationID) உருவாக்க அனுமதியில்லை.

5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும், புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒரு முறைப்பதிவு கடவுச் சொல்லினை வேறு நபரிடமோ (அ) முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ள கூடாது.

6. ஒரு முறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் "Apply என்ற உள்ளீடு வழியே நிரந்தரப் பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.

8. புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் உரியநடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.

9. இணையவழி விண்ணப்பத்தில் சில தளங்கள் திருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இறுதியானவையாகக் கருதப்படும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு திருத்தம் கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.

தேர்வு முறை: 

எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு வெளியிடப்படும். சான்றிதழ்களின் சரிபார்ப்பிற்கு பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பதவி மற்றும் அலகு துறை ஒதுக்கீட்டின் பொருட்டு அவர்களின் தரவரிசையின்படி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

மேலும் விவாங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதர சந்தேகங்களை grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

First published:

Tags: TNPSC