Home /News /employment /

TNPSC Current Affairs 12: பரவலாக பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கே

TNPSC Current Affairs 12: பரவலாக பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கே

காட்சிப் படம்

காட்சிப் படம்

கயா 20ஈஏஈ (Gaia 20eae) எனும் நட்சத்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

TNPSC Group IV Exam Preparation:  7301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜுலை 24ம் நாள் நடை பெறயிருக்கிறது. லட்சக்கணக்கான தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.  இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில சமீபத்திய தலைப்புகளை இங்கே காணலாம்.

1.  மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு (State Energy and Climate Index):

மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 ஐ வெளியிட்டது.  குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகியவை தரவரிசையில் முதல் 3 பெரிய மாநிலங்களாக உள்ளன.



தமிழ்நாடு தரவரிசையில் 43.4 சராசரி புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை பெற்றுள்ளது. நன்றாக செயல்பட்ட சிறிய மாநிலங்களின் தரவரிசையில் கோவா முதலிடத்தையும், திரிபுரா, மணிப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. 

2. அஜய் குமார் சூத்: 

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக (Principal Scientific Advisor)அஜய் குமார் சூத் நியமிக்கப்பட்டார்.



3. Gaia 20eae:  கயா 20ஈஏஈ (Gaia 20eae) எனும் நட்சத்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



இளம் நட்சத்திரங்களின் மிகவும் அரிதான குழுவைச் சேர்ந்த பிரிவில் இது உள்ளது.

4. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்:  நாடு முழுவதும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம்” கொண்டாட்டப்பட்டது.  73 மற்றும் 74வது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா நடைமுறைக்கு வந்ததை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அரசியல் சாசனம் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு செயல்பாடுகள் மற்றும் அதிகார பகிர்ந்தளிப்பை தருகிறது.

5.    பள்ளி பஞ்சாயத்து:  கரியமில வாயு நீக்கப்பட்ட முதலாவது பஞ்சாயத்தாக  ஜம்மு கஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத் மாறியிருக்கிறது.  இந்த பஞ்சாயத்தில் 340 வீடுகள் உள்ளன. முன்னதாக, 500 கிலோவோல்ட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.



இந்த சூரிய சக்தி ஆலையை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கிராமத்தில் உள்ள சுமார் 340 வீடுகள் கரியமில வாயு உமிழ்வில் இருந்து விடுவிக்கப்படும் (Carbon Neutral Panchayat ) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம் 

 
Published by:Salanraj R
First published:

Tags: TNPSC

அடுத்த செய்தி