ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - TNPSC அறிவிப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - TNPSC அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

TNPSC CSE 2022 | ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவை பணிகளுக்கான (சிஇஎஸ்இ) தேர்வு 2022ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவை பணிகளுக்கான (சிஇஎஸ்இ) தேர்வு 2022ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ மூலமாக விண்ணப்பிக்கலாம்.

  சிஇஎஸ்இ பணிகளுக்கான நேரடி பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கு மே 3ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம். டின்பிஎஸ்சி சிஇஎஸ்இ எழுதுத்துத் தேர்வு என்பது ஜூன் 26ஆம் தேதி இரண்டு ஷிஃப்ட்களாக நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையில் முதல் பேப்பர் தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரையில் இரண்டாம் கட்டத் தேர்வும் நடைபெற உள்ளது.

  Also Read : ரயில்வேயில் வேலை - 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் ஆன்லைனில் ரூ.150 கட்டணம் செலுத்தி ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் மூலமாக அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செல்லுபடியாகும்.

  முக்கியத் தேதி மற்றும் நேரம் :

  • அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி : ஏப்ரல் 4, 2022.
  • ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : மே 3, 2022.
  • எழுத்துத் தேர்வு முதல் பேப்பர் - ஜூன் 26ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில்.
  • எழுத்துத் தேர்வு பேப்பர் 2 - ஜூன் 26ஆம் தேதி நண்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில்.
  • விண்ணப்பக் கட்டணம் மற்றும் கட்டண விலக்கு விவரம் :

   பதிவுக் கட்டணம் - ரூ.150.

   தேர்வுக் கட்டணம் - ரூ.200

   பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் அருந்ததியர் விண்ணப்பதாரர்கள் - முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

   பழங்குடியினர் - முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - அதிகபட்சமாக 3 முறை இலவசமாக அனுமதி

   பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் - அதிகபட்சமாக 3 முறை இலவசமாக அனுமதி

   முன்னாள் இராணுவத்தினர் - அதிகபட்சமாக 2 முறை இலவசமாக அனுமதிதி

   மாற்றுத்திறனாளிகள் - முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

   கைம்பெண்கள் - முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

   காலிப்பணியிட விவரம் :

   ஆட்டோமொபைல் என்ஜினியர், ஜூனியர் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவிப் பொறியாளர் (வேளாண் துறை), உதவிப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர், உதவி பொறியாளர் (பொதுப்பணித் துறை) , ஜெனரல் ஃபோர்மேன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களில் மொத்தம் 626 இடங்கள் காலியாக உள்ளன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Employment, Job