தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தகுந்த பணியாளரைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்த மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி இந்த மாதம் மூன்று பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இந்த மாதத்தில் முடிவடைகிறது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணி எண்ணிக்கை | விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் | விண்ணப்பம் முடிவடையும் நாள் |
நிதியாளர் | 5 | 11.11.2022 | 10.12.2022 |
உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் | 24 | 15.11.2022 | 14.12.2022 |
கால்நடை உதவி மருத்துவர் | 731+ | 18.11.2022 | 17.12.2022 |
இதையும் வாசிக்க: TNPSC Group 4 Exam: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?
இப்பணிகளின் விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் | வயது வரம்பு | கல்வித்தகுதி |
நிதியாளர் | ரூ.56,100 - 2,05,700/- | அதிகபட்சம் 37 | பொது நிர்வாகத்தில் முதுகலை (M.A.Public Administration) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். |
உளவியல் உதவிப் பேராசிரியர் | ரூ.56,100 - 2,05,700/- | அதிகபட்சம் 37 | 1 ) உளவியலில் (Psychology) M.A/ B.A (Hons)/B.Sc (Hons) அல்லது உளவியல் மருத்துவம் (Clinical Psychology)பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது உளவியல் மருத்துவம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2) மருத்துவ மற்றும் சமூக உளவியலில் (Medical and Social Psychology) முதுகலை டிப்ளமோ அல்லது சமூக உளவியலில் (Social Psychology) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
கால்நடை உதவி மருத்துவர் | ரூ.56,100- 2,05,700/- | அதிகபட்சம் 32 | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
இந்த பணிகளுக்கு மேலும் தேவையான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :
பதவியின் பெயர் | வயது சலுகை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க |
நிதியாளர் | இங்கே கிளிக் செய்யவும் |
உளவியல் உதவிப் பேராசிரியர் | இங்கே கிளிக் செய்யவும் |
கால்நடை உதவி மருத்துவர் | இங்கே கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, TNPSC