ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவப் பணியில் வேலை.. விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன..

TNPSC வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவப் பணியில் வேலை.. விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC Recruitment : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணியில் அடங்கிய பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணியில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பள விவரம்
தமிழ்நாடு மருத்துவப் பணிகள்உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர்24ரூ.56,100 - 2,05,700/- வரை

வயது வரம்பு:

ஆ.தி.ஆ.தி(அ),ப.ப, பி.பி.வ, சீ.ம, பி.வ, பி.வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு 37 ஆண்டுகள். வயது வரம்பு சலுகைகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

1 ) உளவியலில் (Psychology) M.A/ B.A (Hons)/B.Sc (Hons) அல்லது உளவியல் மருத்துவம் (Clinical Psychology)பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது உளவியல் மருத்துவம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2) மருத்துவ மற்றும் சமூக உளவியலில் (Medical and Social Psychology) முதுகலை டிப்ளமோ அல்லது சமூக உளவியலில் (Social Psychology) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக் கட்டணம்:

பதிவுக் கட்டணம் : ரூ.150/-

தேர்வு கட்டணம் : ரூ.200/-

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை, மதுரை,கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : UPSC வேலைவாய்ப்பு : தேசிய ஆவணக் காப்பகத்தில் நிரந்தர வேலை.. ரூ.1,51,100 வரை சம்பளம்..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://apply.tnpscexams.in/

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள்14.12.2022
ஆன்லைனில் திருத்தம் செய்ய அவகாசம்19.12.2022 முதல் 21.12.2022 வரை
கணினி வழி தேர்வு நாள்14.03.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC