ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உளவியல் உதவிப் பேராசிரியர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உளவியல் உதவிப் பேராசிரியர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு

TNPSC Jobs: கணினித் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இருந்து தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான ஆட் சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு கணினி வழித் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

  அறிவிக்கை நாள்15/11/2022
  இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்14/12/2022
  பதவியின் பெயர்உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் (ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY - CUM - CLINICAL PSYCHOLOGIST)
  காலியிடங்கள்24
  கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்14.03.2023 (தாள் I -முற்பகல், தாள்- II பிற்பகல் )
  வயது வரம்பு1.07.2022 அன்று, 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது. ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது
  விண்ணப்பக் கட்டணம்பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

  கல்வித் தகுதி:

  விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

   விண்ணப்பம் செய்வது எப்படி?

  இணையவழி விண்ணப்பத்தை 19.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  கணினித் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இருந்து தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.

  நிர்ணயிக்கப்பட்ட கல்வித்  தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட  கல்வித் தகுதிகளை தமிழ் வழியில்  பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

  TNPSC Assistant Professor of Psychology –cum-Clinical Psychologist  Job Notification

  Published by:Salanraj R
  First published:

  Tags: TNPSC