ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2 லட்சம் சம்பளத்தில் வனத் துறையில் வேலைவாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

ரூ.2 லட்சம் சம்பளத்தில் வனத் துறையில் வேலைவாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC Assistant Conservator of Forests: முதல்நிலை தேர்வு ஒற்றைத் தாள் கொண்டது. பொது அறிவு மற்றும் மனக்கணக்கு பாடங்களில் இருந்து 300 கேள்விகள் கேட்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

TNPSC Group 1A Service Notification: தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர்  (குரூப் 1ஏ நிலை பணி - Assistant Conservator of Forests included in Group–IA Services.) பதவிக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

முக்கியமான நாட்கள்: 

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 12.01.2023

இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம்  மேற்கொள்வதற்கான காலம்: 17.01.2023 முதல் 19.01.2023

முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2023

முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு : ஜூன் 2023

முதன்மை எழுத்துத் தேர்வு : செப்டம்பர், 2023

வாய்மொழித் தேர்வு & கலந்தாய்வு:  டிசம்பர் 2023

காலியிடங்கள்: 09 

சம்பளம் : ரூ.  56100- 2,05,700/- வரை (நிலை 22)

வயது வரம்பு: 1.07.2022 அன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) , ஆதி திராவிடர், ஆதி திராவிட அருந்ததியர், பழங்குடியினர் 1.07.2022 அன்று 34 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்  1.07.2022 அன்று 39 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: அரசு வேலை உங்கள் கனவா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

TNPSC Group 1A Service கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பாடங்களில் ஏதேனும் ஒன்றினை முதன்மை பாடமாக கொண்டு   இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

A Bachelor’s Degree in Forestry

A Bachelor’s Degree in Botany

A Bachelor’s Degree in Zoology

A Bachelor’s Degree in Physics

A Bachelor’s Degree in Chemistry

A Bachelor’s Degree in Mathematics

A Bachelor’s Degree in Statistics

A Bachelor’s Degree in Geology9. A Bachelor’s Degree in Agriculture

A Bachelor’s Degree in Horticulture

A Bachelor’s Degree in Agricultural Engineering

A Bachelor’s Degree in Civil Engineering

A Bachelor’s Degree in Chemical Engineering

A Bachelor’s Degree in Computer/Computer Science Engineering

A Bachelor’s Degree in Electrical Engineering

A Bachelor’s Degree in Electronics Engineering

A Bachelor’s Degree in Mechanical Engineering

A Bachelor’s Degree in Computer Applications

A Bachelor’s Degree in Computer Science

A Bachelor’s Degree in Environmental Science

A Bachelor’s Degree in Veterinary Science

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான தேர்வு திட்டம்: 

முதல்நிலை தேர்வு ஒற்றைத் தாள் கொண்டது. பொது அறிவு மற்றும் மனக்கணக்கு பாடங்களில் இருந்து 300 கேள்விகள் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வு 5 தாள்களைக் கொண்டது. முதற் தாள் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாளாகும். 2ம் தாள் பொது அறிவு, 3ம் தாள் பொது ஆங்கிலம், நான்கு மற்றும் ஐந்தாம் தாள் விருப்ப பாடம் ஆகும்.

நேர்முகத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் உண்டு.

இதையும் வாசிக்கTNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி? 

TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Assistant Conservator of Forests included in Group–IA Services.   

First published:

Tags: Tamil Nadu Government Jobs