ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியாக்கிட்டு இருக்கீங்களா.. உங்களுக்கான செய்தி இது

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியாக்கிட்டு இருக்கீங்களா.. உங்களுக்கான செய்தி இது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TNPSC Annual Planner 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு தேர்வுகளுக்கான உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நேற்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடந்தினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டார். அதில், 2022-ம் ஆண்டு முழுவதும் எந்தெந்தெந்த தேர்வுகளுக்கு எந்த மாதம் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது என்ற தகவல் அடங்கியுள்ளது.

வரிசை எண்பதவி/ தேர்வின் பெயர்அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்
1கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர்ஜனவரி
2 இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1ஜனவரி
3ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (Group 2, Group 2 A)பிப்ரவரி
4நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர்பிப்ரவரி
5ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்மார்ச்
6சமூகப் பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்மார்ச்
7ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (Group 4, VAO)மார்ச்
8சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர்ஏப்ரல்
9இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IIIஏப்ரல்

வரிசை எண்பதவி/ தேர்வின் பெயர்அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்
10இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IVஏப்ரல்
11 தொல்லியல்துறையில் இளநிலை கல்வெட்டாய்வாளர்மே
12சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர்மே
13தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதிமே
14தொகுதி- V A பணிகள்ஜூன்
15ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (Group 1)ஜூன்
16மருத்துவக் கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில் தொழில்முறை ஆலோசகர்ஜூன்
17வனத்துறையில் வனத் தொழில் பழகுநர்ஜூலை
18தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர்ஜூலை

வரிசை எண்பதவி/ தேர்வின் பெயர்அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்
19தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர்ஜூலை
20ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IIIஆகஸ்ட்
21ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுஆகஸ்ட்
22மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர்செப்டம்பர்
23பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்செப்டம்பர்
24பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர்செப்டம்பர்
25மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர்அக்டோபர்
26கல்லூரி கல்வித்துறையில் நிதியாளர்அக்டோபர்
27மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர்நவம்பர்

வரிசை எண்பதவி/ தேர்வின் பெயர்அறிக்கை வெளியிட்படும் மாதம்
28தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர்நவம்பர்
29வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர்நவம்பர்
30தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர்டிசம்பர்
31ஒருங்கிணைந்த நூலகர் பணிகள்டிசம்பர்
32தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர்டிசம்பர்

First published:

Tags: Group 1, Group 2 exam, Group 4, Group Exams, TNPSC